Published : 23 Jan 2019 11:13 AM
Last Updated : 23 Jan 2019 11:13 AM

காந்தி பேசுகிறார்: கடவுளும் மதமும்

# உண்மையைத்தான் நான் கடவுளாக வழிபடுகிறேன். நான் இன்னும் கடவுளைச் சந்திக்கவில்லை. அவரைச் சந்திக்க எனக்கு இஷ்டமான எதையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளேன். அது என் உயிராக இருந்தாலும் அதையும் வழங்கத் தயாராக உள்ளேன்.

# உண்மை மற்றும் வன்முறையற்ற செயல்களால்தான் கடவுளைக் கொஞ்சமாவது பார்க்க முடியும். அவை இரண்டும்தான் என் கடவுள். அவை, ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை.

# நம்பிக்கை காரணத்துடன் இருக்க வேண்டும். குருட்டாம்போக்கு நம்பிக்கை எளிதில் மறைந்துவிடும்.

# இந்த உலகத்தில் நிறையப் பேர் பசியுடன் உள்ளனர். அவர்கள் முன் கடவுள் ரொட்டித் துண்டாக மாற மாட்டார்.

# தவறு செய்யும் மனிதனைப் பார்க்கும்போது நான் தவறிழைத்ததாக உணர்கிறேன். வெறிகொண்ட ஒருவனைப் பார்க்கும்போது, நானும் அப்படியிருந்தேன் என்று எனக்குள் வார்த்தை ஒலிக்கிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மகிழ்ச்சியாக இல்லாமல் நான் மட்டும் மகிழ்ச்சியாக உணர முடியாது.

# மதம் என்பது மனதைப் பொறுத்தது. உடல்சார்ந்த எந்த அம்சங்களும் ஒருவனின் மதத்தைத் தீர்மானிக்காது.

# ஒருவரின் சொந்த மதம் என்பது, அவருக்கும் அவரைப் படைத்தவருக்கும் இடையே உள்ள விஷயமே அன்றி பிறருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

# கீதை உட்பட எந்த ஒரு திருமறையையும்விட உயர்வானதாக எனது மதிப்பீட்டைப் பயன்படுத்துகிறேன். எனது பகுத்தறிவைவிட எந்தவொரு மறை விளக்கமும் மேலோங்கியிருக்க நான் அனுமதிக்க மாட்டேன்.

# சின்னச் சின்ன வேறுபாடுகள் இருப்பினும்கூட உலகின் அனைத்து மதங்களுமே முன்வைப்பது இதுதான் - சத்தியத்தைத் தவிர்த்து வேறு எதுவும் நிலைத்து நிற்பதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x