Published : 09 Jan 2019 09:10 AM
Last Updated : 09 Jan 2019 09:10 AM

உயிரைப் பறிக்கும் கூடுதல் எடை: நாய்களும் விதிவிலக்கல்ல!

கூடுதல் எடை கொண்ட நாய்கள் இயல்பைக் காட்டிலும் இரண்டரை ஆண்டுகள் முன்னதாகவே மரணமடைவதாக பிரிட்டனின் லிவர்பூல் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

புகழ்பெற்ற நாய் வகைகளைச் சேர்ந்த 50,000 நாய்களிடம் நடத்திய ஆய்வில், ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்களில் கூடுதல் எடை கொண்டவை, வழக்கமான ஆயுட்காலத்தைவிட ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே மரணமடைகின்றன என்றும், யார்க்ஷைர் டெர்ரியர்ஸ் வகை நாய்கள் இரண்டரை ஆண்டுகள் முன்னதாகவே இறக்கின்றன என்றும் தெரியவருகிறது. கூடுதல் எடை காரணமாக நாய்களுக்கு மூட்டுப் பிரச்சினைகள், சுவாசப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பிரச்சினைகள் பற்றிய புரிதல் நாய்களை வளர்ப்பவர்களில் பெரும்பாலானோருக்கு இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x