Published : 13 Dec 2018 10:51 AM
Last Updated : 13 Dec 2018 10:51 AM

மக்களவைத் தேர்தலில் என்னவாகும்?

ஐந்து மாநில சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளை அப்படியே மக்களவைத் தேர்தலுக்குப் பொருத்தினால், என்னவாகும்? காங்கிரஸ் எத்தனை இடங்களைப் பிடிக்கும், பாஜக எத்தனை இடங்களைப் பிடிக்கும்?

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் மொத்தம் 520 சட்ட மன்றத் தொகுதிகள் இருக்கின்றன. சராசரியாக ஒரு மக்களவைத் தொகுதியில் 8 சட்ட மன்றத் தொகுதிகள் இருப்பதாகக் கணக்கிடலாம். ஆக, 520 சட்ட மன்றத் தொகுதிகள் என்பது 65 மக்களவைத் தொகுதிகளுக்குச் சமம்.

2014 மக்களவைத் தேர்தலில் இந்த மூன்று மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 60 தொகுதிகளில் பாஜக வென்றது. காங்கிரஸுக்கு 4 இடங்களில்தான் வெற்றி கிடைத்தது. தற்போது, இந்த மூன்று மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 193 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வென்றிருக்கிறது. இம்மாநிலங்களில் இதே அரசியல் சூழலும் வாக்காளர்களின் மனநிலையும் தொடர்ந்தால், 2019 மக்களவைத் தேர்தலில் 24 தொகுதிகளில் மட்டுமே பாஜகவால் வெல்ல முடியும். 36 இடங்களை அக்கட்சி இழக்க நேரும். காங்கிரஸ் ஏறக்குறைய 40 இடங்களைப் பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x