Last Updated : 17 Oct, 2018 12:30 PM

 

Published : 17 Oct 2018 12:30 PM
Last Updated : 17 Oct 2018 12:30 PM

2 மினிட்ஸ் ஒன்லி 14- மூன்று கேள்விகள்!

‘மீ  டூ’ (#MeToo) – ஹாலி வுட் சினிமாவை புரட்டிப் போட்டுவிட்டு,  இன்று வட இந்தியாவில் தொடங்கி தமிழ்நாடு வரைக்கும் வந்துவிட்டது.  ஏன், மொத்த இந்தியாவும் இன் றைக்கு  பேசக்கூடிய விஷயமாக மாறியிருக்கிறது. இதில் தனிப்பட்ட சில நபர்கள், சம்பவங்கள் கடந்து மொத்தமாக இந்த  ‘மீ டூ – மூவ் மென்ட்’ குறித்து சில கருத்துகளை நான் இங்கே கட்டாயமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக் கிறேன். ரேடியோவில் நான் இதைப் பற்றி பேசினாலும், சமூக வலை தளங்களில் கொஞ்சகாலமாக  விலகியிருக்கிற காரணத்தால் அங்கு இதைப் பற்றி பேசாமல் இருக்கிறேன்.

என்னைச் சந்திக்கிற பலபேர்  என்னிடம்  ‘மீ டூ’ தொடர்பா மூணு, நாலு கேள்விகளை முன் வைக் கிறார்கள். அதில்  முதலாவதா…  ‘இத்தனை வருஷமா இல்லாமல் இன்னைக்கு ஏன் திடீர்னு வந்து சொல்றாங்க?’ அடுத்ததா, ‘இப்போ சொன்னா மட்டும் பெருசா என்ன நடக்கப் போகுது?’ மூணாவதா, ‘இது என்ன பிரபலமானவர்களை டார்கெட் செய்து அவங்க பேரை கெடுக்குற மாதிரி இருக்கே?’ முடிவா, ‘இதுக்கு நான் சொல்ற தீர்வு என்ன?’ இந்த மாதிரி கேள்வி கள் என்னிடம் கேட்டுக்கொண்டே   இருக்கிறார்கள்.

‘நான் 2001-ல் பாதிக்கப்பட் டேன். 1999-ல், 2005-ல்’ இப்படி வெளியே வந்து பலரும் தனக்கு நடந்ததை இப்போது சொல்லக் காரணம், இன்னைக்கு கத்தினால் கேட்கும்.  ஆப்பிரிக்காவில் ஒரு பெண் தனக்கு நடந்த பாதிப்பை சமூக வலைதளத்தில் இன்று எழு தும்போது அதை உலகம் பார்க்க முடியும். அமைச்சர் ஒருவர் டோல் பிளாசாவில் உள்ள ஊழியரை அடித்தால், அதை உடனடியாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு அந்த அமைச்சரின் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்த முடியும்.

2003-ல், 2005-ல் நடந்தபோது  அதையெல்லாம் வெளியில் சொன் னால் அந்த தனி நபரை என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியும் என்கிற நிலை இருந்தது. அதனால் அப்போது யாரும் வெளியே சொல்லவில்லை. அந்த தைரியத்தை வெளிப்படுத்த இப் போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதேபோல ஒரு தனி நபர் பாதிப் புக்கு உள்ளாகும்போது அதைப் பற்றி 3 லட்சம் பேர் பேசுகிறார்கள் என்றால், நமக்குப்  பின்னால் 3 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அப்போது வரும் தைரியமே வேறு.

‘பிரபலங்கள் மீது சேற்றை வாரிப் பூசுவதுதான் இதன் நோக் கமா?’ என்று சிலர் கேட்கிறார்கள். 130 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு இது. இவர்களில் ‘200-ல் இருந்து 300 பேர் செய்த தவறை தோலுரித்து வெளியே கொண்டுவந்த இந்த  ‘மீ டூ – மூவ் மென்ட்’  உண்மையில் அல்டி மேட் வெற்றியா’ என்றால், இல்லை.

‘130 கோடி மக்களில் 60 முதல் 70 கோடி பேர் ஆண்களாக இருக்கும் போது அவர்களில் குற்றம் சாட்டப் பட்ட 250 பேரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் நல்லவர்களா’ என்றால் அதுவும் இல்லை.

அப்படியென்றால் இந்த  ‘மீ டு’ எதற்குப் பயன்படும்?  இந்த 250 பேர் செய்த செயலை வெளியே கொண்டுவரும்போது, அது அடுத்து பல நூறு லட்சம் ஆண் களுக்கு  பயத்தை விதைக் கும். இனி தவறாக ஒரு குறுஞ் செய்தி அனுப்பக் கூடாது? அநாவசியமான அத்துமீறல் கூடாது? கண்ணியமற்ற வீடியோ அனுப்பக் கூடாது  என்ற பயத்தை  ஆண்களுக்குக் கொடுக்கும்

இன்று ‘மீ டு’ வழியே பெண் களால் அடையாளம் காணப்பட்ட  இந்த 250 பேரைப் போல, இங்கே 30 வயதிலும், 40 வயதிலும், 50 வயதிலும் உள்ள பல ஆண்கள் ஒரு  நிலைப்பாட்டுடன் வளர்ந்தவர்கள். வளர்க்கப்பட்டவர்கள்.  இவர்கள் ஒட்டுமொத்தமாக திடீரென ஒரு நாளில் உண்மையாக மாற வாய்ப்பு இல்லை. ஆனாலும் இந்த பயம் நல்லது. அது தேவையும்கூட.

அபுதாபியில் தண்டனைசவுதி அரேபியாவில் பாலியல் ரீதியான குற்றங்களுக்கு மிகக் கடுமையான தண்டனை இருக்கு. அபுதாபியில் கஞ்சா விற்றால் மரண தண்டனை.  இந்த மாதிரி ஒரு பயம் உண்டல்லவா. அந்த மாதிரி நம் ஊரில்  இயற்றப் படும் சட்டத்துக்கு பயம் இல்லை யென்றாலும், இன்று சமூக வலை தளங்களுக்கு பயம் உண்டாகி யுள்ளது.  இது மாபெரும் வெற்றி.

நம் அம்மா, அக்கா மாதிரி நம் மைச் சுற்றி  வெளியில் நடமாடுகிற பெண்களையும்  நினைக்க வைக்க இந்த மூவ்மென்ட் தேவை.

ஆனாலும் இன்னொரு விஷ யம்… அடுத்த சில வருடங்களுக் குத்தான் இந்த பயம் இருக்கும். அது ஏற்படுத்தும் மாற்றத்தையும் பார்க்க முடியும். அடுத்தடுத்து பல வருஷங்களுக்கு ஏன் தொடர்ந்து இந்த பிரச்சினை நடக்காமல் இருக்க வாய்ப்பு  உண்டா, என்றால் அது நம் குழந்தைகளால்தான் முடியும். அது எப்படி?

நாம் பார்க்கும்  எத்தனையோ சினிமாக்களில், ‘கோபப்படு கிறாரே, இவர் எப்படி சரியான பெண்?’, ‘இவருக்கு அச்சம் மடம் நாணம் இல்லை’, ‘வில்லனுடன் இருப்பதால் இந்தப் பெண் மது அருந்துகிறார்’, ‘நடு இரவில் சாலை யில் போகிறார்’,  ‘சார்ட் - டிரெஸ் அணிகிறார்’ இப்படி பெண்களை குறை சொல்லிச் சொல்லியே பார்க் கப் பழகியிருக்கிறோம்.  பெண்கள் இதைத்தான் செய்ய வேண்டும் என்று ஆண்களால் திணிக்கப்பட்ட விஷயங்களைத்தான் தற்போது செய்து வருகிறார்கள்.

இது முழுமையாக மாற வேண் டும் என்றால் அடுத்த 20 வருட அவ காசம் தேவை.  5 வயதுக்கு உட் பட்ட நம் குழந்தையோ, நம் பக் கத்து வீட்டு குழந்தைகளோ அல்லது நாளை பிறக்கக்கூடிய குழந்தைகளோ அவர்களை நல்ல மனிதர்களாக மாற்ற வேண் டும். அது ஒரு விதை. ஒரு பெண் தனக்கு சம்பந்தமே இல்லாதவராக இருந்தாலும் என் அக்கா, தங்கை, அம்மா மாதிரியே நடத்துவேன் என்ற மனநிலையாக அந்த விதை வளர வேண்டும். அதைத்தான் இந்த  ‘மீ டூ - மூவ்மென்ட்' அடுத்த 20 வருஷங்களில் செய்ய வேண் டிய தேவையாக இருக்கிறது.

‘ஐ ஆம் ஸ்ட்ரெக்’ என்று ஆங்கி லத்தில் சொல்வோம். என்னால் மாடர்ன் கணவராகவும் இருக்க முடியவில்லை.  என்னால் ஒரு பாரம்பரிய புருஷனாகவும்  இருக்க முடியவில்லை. இதில் பாரம்பரியம் எனும்போது மனைவிதான் எல்லா வேலைகளையும் செய்ய வேண் டும். கணவன் வெளியே சென்று வேலை பார்ப்பார் என்பதுதான். ஆணும், பெண்ணும் சமம் என்று நினைத்தாலும் அதை முழுக்க நடைமுறைபடுத்த முடியாத ஒரு மனநிலையில் இன்னைக்கு 20 முதல் 40 வயதில் உள்ள பல ஆண்கள் இருக்கிறார்கள். இப்படி திரிசங்கு நிலையில் இருக்கிறவர்களுக்கு பெண்களை மதிக்கும் எண்ணம் உருவாகாது.

பயம் நல்லதா?

இன்னைக்கு ‘மீ   டூ’  ஒரு  பயத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால், வெறும் பயத்தினால் மட் டும் ஒரு நல்ல சமூகத்தை கட்ட மைக்க முடியாது.  அந்த நல்ல சமூகத்துக்கு  மதிப்புகள் (வேல் யூஸ்) தேவை. அந்த நல்ல சமூகத் துக்கு முதலீடு (இன்வெஸ்மென்ட்) வெண்டும். அந்த முதலீடுதான் நம் குழந்தைகள்.

இன்னைக்கு நாம முதலீடு செய் கிற நம் குழந்தைகள் மூலம் அடுத்த 20 வருஷங்களுக்குப் பிறகு இந்த மாதிரி  ‘மீ டூ’ - வே தேவைப்படாத ஒரு சூழல் பிறக்கும். அப்போது ஆணும், பெண்ணும்  மாறி மாறி மதிப்பளித்துக் கொள்கிற ஒரு வாழ்க்கை  உண்டாகும்.

இதுக்கு என் வாழ்க்கையில் ஓர் அனுபவம் இருக்கு. அதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

- நிமிடங்கள் ஓடும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x