Published : 23 Jul 2018 09:20 AM
Last Updated : 23 Jul 2018 09:20 AM

கூட்டாட்சி ஒரு அறிமுகம்

சரிசமமான அதிகாரம்

மைய அரசையும் மாநில அரசுகளையும் கொண்டு இயங்கும் அரசமைப்பு, கூட்டாட்சி எனப்படுகிறது. மைய அரசுக்குச் சில பொறுப்புகளும் அதிகாரங்களும் உண்டு. அதுபோலவே, மாநில அரசுகளுக்கும் சில பொறுப்புகளும் அதிகாரங்களும் உண்டு. மைய மற்றும் மாநில அரசுகள் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் இயங்க வேண்டும் என்பதே கூட்டாட்சித் தத்துவம். இத்தகைய அரசியலமைப்பில் அரசின் அதிகாரங்களை வரையறுக்க வேண்டியிருப்பதால், அரசியல் சட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

சிறப்பு யாதெனில்...

மைய அரசும் மாநில அரசுகளும் ஒன்றையொன்று கட்டுப்படுத்த முடியாமல் சரிசமமான அதிகாரத்துடன் இயங்குவது கூட்டாட்சியின் சிறப்பு.

பெரிய பலவீனம்...

மாநிலங்கள் மக்கள்தொகையிலும், நிலப்பரப்பிலும், பொருளாதார வளங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் சமநிலையில் இருந்தால்தான் கூட்டாட்சிக்குப் பலம். சமநிலையற்ற தன்மை கூட்டாட்சியின் பலத்தைக் குலைக்கும்.

இந்தியா, அமெரிக்கா, பிரேஸில், ஜெர்மனி என்று ஏறக்குறைய 25 நாடுகளில் வெவ்வேறு வகையான கூட்டாட்சி முறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன.

இந்தியா கூட்டாட்சி நாடா?

இந்தியாவில் மைய அரசும் மாநில அரசுகளும் இருக்கின்றன. அரசியலமைப்பில் கூட்டாட்சியின் கூறுகளும் இருக்கின்றன. ஆனால், மைய அரசு மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. எனவே, இதை முழுமையான கூட்டாட்சி என்று கூற முடியாது.

முழுமையான கூட்டாட்சிக்கு ஐக்கிய  அமெரிக்க நாடுகள் சிறந்த உதாரணம். அமெரிக்காவில் மைய அரசின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு, எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசுகளுக்கே அளிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x