Published : 29 Jun 2018 09:24 AM
Last Updated : 29 Jun 2018 09:24 AM

பிட்ஸ்: சீனாவின் ஓட்டுநர் இல்லா கார்!

சீனாவின் ஓட்டுநர் இல்லா கார்!

சீனாவின் தியான்ஜின் நகரில் ஓட்டுநர் இல்லா கார்களின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது சீனத்தின் கூகுள் என்றழைக்கப்படும் ‘பைடு’ நிறுவனம். ஏற்கெனவே ஓட்டுநர் இல்லாத கார்களுக்கான ‘அப்போலோ’ கணினி நிரலை உருவாக்கியது இந்நிறுவனம்.

ஜேஈஈ பட்டியல்: பெண்கள் குறைவு

என்ஐடி., ஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஈஈ முதன்மைத் தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்த 1,000 பேரில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 46. தொழில்நுட்பக் கல்வி பெண்களை வெளியே வைத்திருக்கிறதா என்ற விவாதம் எழுந்திருக்கிறது.

ராஜஸ்தானில் ஜீன்ஸுக்குத் தடை!

ராஜஸ்தானில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து அலுவலகத்துக்கு வரக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. பேண்ட், சட்டை மட்டும்தானாம். இது ஜனநாயக விரோதம், ஆடைக் கட்டுப்பாட்டில் இத்தனை கடுமை வேண்டியதில்லை என்கிறார்கள் அரசு ஊழியர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x