Last Updated : 25 Jun, 2018 08:19 AM

 

Published : 25 Jun 2018 08:19 AM
Last Updated : 25 Jun 2018 08:19 AM

நகரங்களின் தரத்தை நிர்ணயிக்கும் வாழ்நிலைக் குறியீட்டெண்!

நீ

ங்கள் வாழும் நகரம் எல்லா வகையிலும் வசதிகளையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறதா? இந்தக் கேள்வியின் அடிப்படையில் நகரங்களைத் தரப்படுத்த உருவாக்கப்படுகிறது ‘வாழ்நிலைக் குறியீட் டெண்’ என்ற மதிப்பிடல் முறை. 112 நகரங்கள் இந்த அடிப்படையில் மதிப்பிடப்படவிருக்கின்றன. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் நகரங்களின் நிலையை அறிந்து மேம்படுத்த இது உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தில், நகரங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் ‘அம்ருத்’, ‘ஸ்மார்ட் சிடி’, ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ ஆகிய திட்டங்கள் மூலம் நகரம் அடைந்துள்ள வளர்ச்சியும் மாற்றங்களும் பதிவுசெய்யப்படும். நகரங்களில் நிலவும் போக்குவரத்து வசதி, தூய்மை, கழிவுகள் அகற்றல், பொழுதுபோக்கு அம்சங்கள், மின்சாரம், குடிநீர், சாலைகள், நகரப் போக்குவரத்து, போக்குவரத்து அமைப்புகளிடையே ஒருங்கிணைவு, கல்வி வசதி, வணிகம், அரசு நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், நகரின் நிலம்- நீர்- காற்று ஆகியவற்றில் நிலவும் மாசுகள், குடியிருப்புக்கேற்ற வீடுகள், மக்களுக்கும் உடைமைகளுக்கும் கிடைக்கும் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, மக்களிடையே சமூக உறவுகள், கலாச்சாரம் என்று அனைத்து அம்சங்களும் கணக்கில் கொள்ளப்படும்.

இந்த அம்சங்கள் முதலில் 15 வகைகளாகப் பிரிக்கப்படும். அவற்றிலிருந்து 79 அடையாளங்கள் நகரின் வாழ்நிலைக் குறியீடுகளாகப் பகுக்கப்படும். நிறுவனரீதியாகவும் சமூக, பொருளாதார, கட்டமைப்புரீதியாகவும் குறியீட் டெண் மதிப்பிடப்படும். இதற்கான கட்டமைப்பும் வரையறைக்கப்பட்டுவரு கிறது. குறைபாடுள்ள அம்சங்களை மேம்படுத்துவதற்கான வழிகளும் கையாளப்படும். ஆண்டுதோறும் ஜூன் மாதம் இந்த வாழ்நிலைக் குறியீடு வெளியிடப்படும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x