Published : 25 Jun 2018 08:18 AM
Last Updated : 25 Jun 2018 08:18 AM

பிட்ஸ்: புல்லட் ரயிலுக்கு நிபந்தனை

புல்லட் ரயிலுக்கு நிபந்தனை

மகாராஷ்டிரத்தின் பல்கர் மாவட்டத்தின் 73 கிராமங்கள் வழியாக புல்லட் ரயில் திட்டம் அமைக்கப்படவிருக்கும் நிலையில், மருத்துவ வசதி, தெரு விளக்குகள் உள்ளிட்டவை வேண்டும் நிபந்தனை விதித்திருக்கிறார்கள் கிராம மக்கள்.

தந்தை எனும் வழிகாட்டி

சர்ச்சைகளுக்குப் புகழ்பெற்ற நடிகர் சஞ்சய் தத், “தந்தை சுனில் தத்துடன் சுமுகமான உறவு இருந்ததில்லை. ஆனால், அவர்தான் எல்லா தருணங்களிலும் எனக்குத் துணை நின்றவர். வழிகாட்டி” என்று நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார்.

மன்னர் சொத்துக்கும் வரி!

தந்தையின் மரணத்துக்குப் பிறகு, தாய்லாந்தின் புதிய மன்னராகியிருக்கும் மஹா வஜிராலோங்கோர்ன் ரூ. லட்சம் கோடி சொத்துக்கு அதிபராகியிருக்கிறார். அந்நாட்டில் மன்னராக இருந்தாலும் வரி கட்டுவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x