Published : 22 Jun 2018 07:53 AM
Last Updated : 22 Jun 2018 07:53 AM

பிட்ஸ்!: விதிகளை மீறிய அமேசான்!

விதிகளை மீறிய அமேசான்!

சீனாவில் தொழிலாளர் சட்டங்களை மீறி அமேசான் நிறுவனம் செயல்பட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது. 40% தொழிலாளர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதும், விடுமுறைகள் மறுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. அமேசானுக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

முகமற்ற நாடாளுமன்ற உறுப்பினர்!

இத்தாலி நாடாளுமன்றத் தேர்தலில் பியேரா ஐயெலோவின் வெற்றி குறிப்பிடத்தக்கது. 1991-ல் மாஃபியாவால் தன் கணவன் கொல்லப்பட்ட வழக்கில் மிக முக்கிய சாட்சியமாக ஐயெலோ இருந்ததால் தேர்தல் பிரச்சாரத்தின்போது தன் முகத்தை மக்களிடம் காட்டவில்லை. புகைப்படங்கள்கூட வெளியிடவில்லை.

4,600 பேர் பணிநீக்கம்!

விமான இன்ஜின் தயாரிக்கும் பிரிட்டிஷ் நிறுவனமான ரால்ஸ்-ராய்ஸ், 4,600 பேரை பணிநீக்கம் செய்ய எடுத்திருக்கும் முடிவு அதிர வைத்திருக்கிறது. ரூ. 3,600 கோடி மிச்சம்பிடிப்பதற்கான நடவடிக்கை இது என அந்நிறுவனம் தெரிவித்தாலும் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாகிவிட்டது என்கிறார்கள் அதன் 55 ஆயிரம் ஊழியர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x