Published : 05 Dec 2015 01:04 PM
Last Updated : 05 Dec 2015 01:04 PM

களத்தில் தி இந்து: மக்களுக்கு என்ன தேவை?

உதவும் கரங்கள் ஒன்றுசேர்கின்றன!

*



கடலூர்

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 34 கிராமங்களில் 6402 பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பாய், போர்வை, ஸ்டவ், சிறுவர், பெரியவர்களுக்கான டிரஸ், மளிகைப் பொருட்கள் அடங்கும்.

கடந்த 3 தினங்களாக கடலூர் மாவட்டத்தில் மழைக்கு நடுவே நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. பல சமூக ஆர்வலர்கள் கொட்டும் மழையையும் எதிர்பாராமல் நிவாரணப் பணியில் தங்களை இணைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி இந்து தமிழ் சார்பில் உதவி வருகின்றனர்.

நேற்று கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த ஆபத்ராணபுரத்தில் குடிசைகளை இழந்தும், வீட்டுக்குள் சகதியான நிலையில் வசித்து வருபவர்களுக்கு பாய், போர்வை, மண்ணெண்ய் ஸ்டவ், ஹார்லிக்ஸ் ஓட்ஸ் வழங்கப்பட்டன. இதில் வடலூர் சமூக ஆர்வலர்கள் பார்த்திபன், ஸ்ரீபதி, ரவிசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு 123 பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

அதேபோன்று, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை அடுத்த லால்பேட்டை, கொளக்குடி வடக்கு, கொல்லிமலை கீழ்பாதி மற்றும் மேல்பாதி, வீராணம் ஏரிக்கரை மற்றும் வெள்ளியங்கால் ஓடை பகுதிகளில் வசிக்கும் சுமார் 250 பயனாளிகளுக்கு வீராணம் ஏரிப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

நாகை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை டாக்டர் ராஜசிம்மன் சார்பில் 25 போர்வைகள், கும்பகோணம் லதா ராசய்யன் சார்பில் 25 கிலோ அரிசி, காரைக்கால் சிவப்பிரகாசம் சார்பில் 15 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்ற பொறியாளர்கள் சங்க தஞ்சை மாவட்டக் கிளை சார்பில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 35 போர்வைகளும், கும்பகோணம் அன்னை கல்லூரி சார்பில் 2 பெட்டிகள் நிறைய உடைகள் வழங்கப்பட்டன. ஆடுதுறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் பிச்சுமணி தலா சார்பில் 3 ஸ்டவ்கள், போர்வைகள், பாய்கள் வழங்கப்பட்டன.

திருச்சி:

திருச்சியில் வாசகர் கிருஷ்ணமூர்த்தி சார்பில் 3 பெட்டி பிஸ்க்ட் பாக்கெட்டுகள், ஆறுமுகம் சார்பில் 20 கிலோ அரிசி, ஸ்ரீரங்கம் எல்ஐசி கிளை சார்பில் 10 ஸ்டவ்கள், நவீன்குமார் சார்பில் 4 போர்வைகள், செந்தில் சார்பில் 10 பாய்கள் வழங்கப்பட்டுள்ளது.

கரூர்:

கரூர் தாந்தோணிமலை எம்.சீனிவாசன் சார்பில் 12 ஸ்டவ்கள், 10 பாய்கள், கரூர் வடக்கு காந்திகிராமம் என்.இந்திரா சார்பில் 10 போர்வைகள், 10 பாய்கள், காகிதபுரம் பி.விஜயகுமார் சார்பில் 1 ஸ்டவ், 5 பாய்கள், கார்த்திக் சார்பில் 20 போர்வை, 20 பாய்கள், ஆத்தூர் பி.சிவசாமி சார்பில் 25 போர்வைகள் வழங்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அன்னபூர்னா புட் புராடெக்ஸ் நிறுவனம் 50 ஆயிரம் மதிப்புள்ள பிஸ்கெட்டுகள், பிரெட் பாக்கெட்டுகளை அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரெட் மற்றும் பிஸ்கெட்டுகள் வழங்க ஆர்டர் தருபவர்கள் தயாரிப்பு செலவை மட்டும் கொடுத்தால் போதும். என அறிவித்துள்ளது.

ஓசூர்:

ஓசூர் அடுத்த நல்லூரில் உள்ள சித்தார்த் வில்லேஜ் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அரிசி 236 கிலோ, சர்க்கரை 102 கிலோ, கோதுமை 52 கிலோ, பருப்பு 6 கிலோ, சமையல் எண்ணெய் 18 லிட்டர், நிலவேம்பு 25 கிலோ மற்றும் துணிகள் ஆகியவற்றை கடலூருக்கு அனுப்பி வைத்தனர்.

காவேரிப்பட்டணத்தை சேர்ந்த அருள்பெருமாள் குடும்பத்தார், ராஜசேகர், முனிவேல், வின்சென்ட் மற்றும் அவர்களது நண்பர்கள் 17 பேர் இணைந்து 16 ஸ்ட்வ்கள், 25 பாய்கள், 55 போர்வைகள், மற்றும் குழந்தைகள், பெரியவர்களுக்கான உடைகள், பாத்திரங்களை அனுப்பி வைத்தனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த வாசகர் வானன் என்பவர் 4 பெட்டி குடிநீர் பாட்டில்கள், 2 பெட்டி துணிகள் அனுப்பி உள்ளார். வேலூரைச் சேர்ந்த ஆடிட்டர் தாமஸ் என்பவர் தனது ‘தி டிரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் 1,100 பிஸ்கட் பாக்கெட் மற்றும் 300 தைலம் பாட்டில்கள் வழங்கியுள்ளார்.

தருமபுரி:

தருமபுரி அடுத்த குள்ளனூர் பகுதியைச் சேர்ந்த முரளி சார்பில் 4 பாய், 5 வேட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. தருமபுரி பிடமனேரி பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தங்கள் குழந்தைகளான தமிழ் இனியா, நந்த கிஷோர் பெயரில் 6 போர்வை, 6 பாய், 6 தலையணை, 4 மேட், 2 ஸ்டவ் மற்றும் ஒரு பெட்டி நிறைய பிஸ்கட் பாக்கெட்களை அனுப்பி வைத்துள்ளார்.

தருமபுரி ரயில் நிலையம் பகுதியைச் சேர்ந்த சாந்தாமணி என்பவர் 2 போர்வை, 1 ஸ்டவ், அவரது பேத்தி சாய் பிருந்தா 1 ஸ்டவ் ஆகியவற்றை அனுப்பியுள்ளார்.

கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

‘தி இந்து' தமிழ், வாசகர்களின் உதவியோடு கடலூர், சென்னை சுற்றுப்புறங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறது. நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் முன்வந்து ‘தி இந்து' தமிழுடன் இணைந்துள்னர். நீங்களும் இந்தப் பணியில் எங்களுடன் இணையலாம்.

சென்னையில் நிவாரணப் பொருட்களை சேமித்து வைக்க, இஸ்பஹானி குழுமத்தினர், அண்ணாசாலையில் உள்ள அவர்களது புதிய கட்டிடத்தை தற்காலிமாக தர முன்வந்துள்ளனர். மேலும் சென்னை காவல் துறை உதவி ஆணையாளர் பீர் முகமது அவர்களும் சென்னை சேப்பாக்கத்திலுள்ள ஒரு கட்டிடத்தை பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளார்.

அத்தியாவசிய தேவைகளான பாய், போர்வை, தண்ணீர், பிஸ்கட், பால் பாக்கெட், பால் பவுடர், ரெயின்கோட், குடை, விசிறி, மெழுகுவர்த்தி, சானிடரி நாப்கின், குழந்தைகளுக்கான டயாபர், உள்ளிட்டவற்றை நீங்கள் அளிக்கலாம்.

‘தி இந்து' தமிழுடன் கைகோத்து மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 7401419575, 9551511138 ஆகிய எண்களை தொடர்புகொள்ளுங்கள்.

வடலூரை அடுத்த ஆபத்ராணபுரத்தில் மழை வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான பகுதியில் வசிக்கும் பார்வையிழந்த ராணி என்பவருக்கு ‘தி இந்து’ தமிழ் வாசகர்கள் அளித்த நிவாரணப் பொருட்களை வழங்குகிறார் சமூக ஆர்வலர் பார்த்திபன்.

கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இஸ்லாமிக் எழுத்தறிவு இயக்கம் (ஐஎல்எம்ஐ) சார்பில் பாய், போர்வை ஆகியவற்றை அதன் தலைவர் மவுலானா சம்சுதீன் காசிமி, மக்கா மஸ்ஜித் செயலாளர் ஹாஜி முகமது மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள், ‘தி இந்து’ நாளிதழின் சென்னை அலுவலகத்தில் வழங்கினர்.

மக்களுக்கு என்ன தேவை?

பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல விதங்களிலும் உதவப் பலர் முன்வருகிறார்கள். தலைவலிக்கான தைலம், சளித் தைலம், இருமல் மாத்திரை - மருந்துகள், கொசுக் கடியைத் தடுக்கும் களிம்பு, கொசு வத்திச் சுருள், உடல் அரிப்புக்குப் போடும் களிம்புகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பால் பவுடர், குழந்தைகளுக்கான புட்டிப் பால், உலர் பழங்கள், பிரெட், பிஸ்கெட் முதலான பொருள்கள் மக்களுக்குத் தேவைப்படுகின்றன. நிவாரண முகாம்களிலும் மற்ற இடங்களிலும் தங்கியிருப்பவர்களுக்கு இந்தப் பொருள்களைக் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக சிஸ்டம் மேலாளர் விஜயகுமாரின் மகளான மாணவி இலக்கியா (5-ம் வகுப்பு) கடந்த 4 மாதங்களாக தான் சேர்த்த உண்டியல் பணத்திலிருந்து வாங்கிய பாய் மற்றும் போர்வையை கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.

தூத்துக்குடி கேபிஎன் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் தான் சேமித்த உண்டியல் பணத்தை தனது பெரியம்மா கலாவதியுடன் வந்து ஒப்படைக்கிறார் மாணவி இலக்கியா.

கோவை

கோவை சூலூரைச் சேர்ந்த எஸ்.ரவிக்குமார் ரூ.4 ஆயிரம் மதிப்பில் 100 பிளாஸ்டிக் குடம், அதே எண்ணிக்கையில் குடத்துக்கான மூடித் தட்டு, டம்ளர் ஆகியவற்றை கே.பி.என். போக்குவரத்து அலுவலகம் மூலமாக அனுப்பி வைத்தார்.

நஞ்சேகவுண்டன்புதூர் ஜி.என்.மில் பகுதியைச் சேர்ந்த சிவசக்தி மகளிர் குழு சார்பில் 5 மண்ணெண்ணெய் அடுப்புகள், 10 சேலைகள், 7 பேன்ட், 2 சட்டை, 2 வேட்டி ஆகியவை கே.பி.என். அலுவலகம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் எட்வெர்ட் ரோசாரியோ சார்பில் 6 லுங்கி, 6 நைட்டிகள் மற்றும் கே.பி.ஆர். மில்லைச் சேர்ந்த முருகப்பன் சார்பில் 25 கிலோ அரிசி, கோவையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் சார்பில் 2 பாய், 2 போர்வை ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டது.

சேலம்

சேலம் ஃபேர்லேண்ட்ஸ் திரிவேணி எர்த் மூவர்ஸ் நிறுவனம் சார்பில் 100 போர்வைகள், 20 பாய்களை வழங்கப்பட்டுள்ளன. ஏற்காடு அடிவாரம் சுவாமிநாதன், சீலநாயக்கன்பட்டி பாலசுப்பிரமணியன் ஆகியோர் சார்பில் ஸ்டவ்கள், பெரியபுதூர் ராஜமாணிக்கம் சார்பில் 20 கிலோ குழம்பு தாளிப்பு வடகம் அனுப்பப்பட்டுள்ளன. நாமக்கல்லை சேர்ந்த மனோகர் மணெ்ணெண்ணெய் அடுப்பு வழங்கியுள்ளார்.

சென்னையில் மழை பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வழங்குவதற்காக, சேலம் செவ்வாய்பேட்டை நண்பர்கள் சார்பில் 5 ஆயிரம் உணவுப்பொட்டலங்கள் தயார் செய்து அனுப்பி இருந்தனர். நேற்று காலை பாதிக்கப்பட்ட பகுதியில் வழங்கப்பட்டது. மேலும் மருந்து பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.

வடக்கு ராஜவீதி, தஞ்சாவூர் என்ற முகவரியில் இருக்கும் தஞ்சாவூர் ரோட் வேஸ் என்ற போக்குவரத்து நிறுவனத்தில், கொடுக்க நினைக்கும் பொருட்களை ஒப்படைக்கலாம். அவர்கள் இலவசமாக அதை சென்னைக்கு அனுப்பி வைப்பார்கள். (தொடர்பு அண்ணாமலை: 04362-250075)

ஈரோடு

ஈரோடு செட்டிபாளையம் பி.ராமலிங்கம் குடும்பத்தார் சார்பில் மண்ணெண்ணை ஸ்டவ் 50, அரிசி 250 கிலோ, சர்க்கரை 50 கிலோ, துவரம்பருப்பு, கோதுமை ரவை ஆகியவை தலா 25 கிலோ, ஆர்லிக்ஸ் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஈரோடு டாக்டர் பாண்டியன் பிள்ளை சார்பில் போர்வைகள், என். சண்முகவடிவேல், எஸ் ஜெயபால் ஆகியோர் சார்பில் பாய் மற்றும் போர்வைகள், ஈரோடு எல்.ஐ.சி. முகவர் ஆர். கணபதி சார்பில் 35 போர்வைகள் வழங்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் மில்லத் இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள் 100 பிளாஸ்டிக் குடங்களை அளித்துள்ளனர். பாளையங்கோட்டை அன்புநகர் விஜயலட்சுமி, மகாராஜநகர் விஸ்வநாதன் ஆகியோர் போர்வைகள், ஆடைகள், ஸ்டவ் வழங்கினர். மு. வள்ளிநாயகம் 50 கிலோ அரிசி, 50 கிலோ கோதுமை, 3 அடுப்பு வழங்கினார். தூத்துக்குடி சுந்தரவேல்புரம் மேற்கு ஜி. வரதராஜன் தலா 25 கிலோ எடையுள்ள 10 மூட்டை அரிசி வழங்கியுள்ளார்.

திருநெல்வேலி மகாராஜநகர் செயின்ட் ஜூட்ஸ் தேவாலயத்தின் புனித வின்சென்ட் தே பவுல் சபையினர் 20 பெட்டிகளில் 1200 ஆடைகள், 7 ஸ்டவ், 15 பாய்கள், 2 குடங்கள் மற்றும் சமையல் பாத்திரங்களை கேபிஎன் நிறுவனத்தில் ஒப்படைத்தனர்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் 100 பிளாஸ்டிக் குடங்களை கேபிஎன் நிறுவனத்தில் அளித்தனர்.

திருநெல்வேலி மகாராஜநகர் செயின்ட் ஜூட்ஸ் தேவாலயத்தின் புனித வின்சென்ட் தே பவுல் சபையினர் பல்வேறு பொருட்களை அளித்தனர்.

மதுரை:

மதுரையில் பாண்டிராஜ், சக்திவேல், டவுட்போர்டு நிறுவனம், மணி, பெல் இண்டஸ்ட்ரீஸ், தி்ண்டுக்கல் பாஸ்கரன், பிரிட்டோராஜ், தேனி மாடசாமி ஆகியோர் போர்வை, ஸ்டவ், பாய், புது துணிகள், பிஸ்கட் உள்ளிட்ட கெடாத உணவுப்பொருட்களை அனுப்பியுள்ளனர்.

மதுரையிலிருந்து அவசியம் டிரஸ்ட், மதுரைரெட்டி கஞ்சம் கல்வி அறக்கட்டளை, கீழ அண்ணாத்தோப்பு பொதுமக்கள், டாக்டர் அரவிந்தராஜ், மேட் பிளட் டோனர், பிரதீப், வெங்கடாச்சலம், கிரீவன், பாலசுப்பிரமணியன், வனராஜா, ஞானசேகரன், பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன், அமுதன், சிவக்குமார், கிருத்திகா நாத், குமரேஸ் ஆகியோர் போர்வை, பாய், ஸ்டவ், புதிய துணிகள், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்கள், தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.

மதுரை கேபிஎன் டிராவல்ஸில் அவசியம் டிரஸ்ட் நிறுவனத்தினர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x