Published : 10 Jun 2019 04:42 PM
Last Updated : 10 Jun 2019 04:42 PM

நெட்டிசன் நோட்ஸ்: யுவராஜ் சிங் ஓய்வு - இந்தியா கண்டெடுத்த ரத்தினம்

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்று (திங்கட்கிழமை) சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்கள் வருத்தத்தையும், வாழ்த்தையும் தெரிவித்தனர். அதுபற்றிய தொகுப்பு இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்...

SKP KARUNA

யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்ல இருந்து ஓய்வு பெறுகிறார். எத்தனையோ கிரிக்கெட்டர்களைப் பார்த்திருந்தாலும், நான் கண்ட முதல் modern new age Indian cricketer என யுவராஜ் சிங்கைதான் சொல்வேன். அந்த ஆட்டியூடே அப்போதைக்கு புத்தம் புதுசு. Let's wish him for a great second innings.

ஆல்தோட்டபூபதி‏

OK, யுவராஜ் சிங் சிஎஸ்கே டீம்ல சேர நேரம் வந்தாச்சு ;-)

கணேஷ் வாணியம்பாடி

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு.

இந்தியா கண்டெடுத்த ரத்தினங்களுள் ஒன்று.

ஒரு கிரிக்கெட் வீரரின் கடைசிக் கட்ட வாழ்க்கை எப்படி அமைந்து விடக்கூடாது என்பதற்கு யுவராஜ் ஒரு உதாரணம்.

எங்களை இத்தனை ஆண்டுகள் மகிழ்வித்தமைக்கு நன்றி.

YuvrajSingh

#YuvrajSingh

யுவ்ராஜ் லாம்

கோலி படிச்ச ஸ்கூல் ல சீனியர்...  

மாஸ்டர் ப்ளேயர்  

எதிர் டீம் லாம் அவுட் ஆக்க மண்டயப் பிச்சிட்டு சுத்துவானுங்க.. 

அசால்டா சிக்ஸ் பறக்கும்  

மிஸ் யு யுவி    

மறக்க முடியாத ப்ளேயர் தலைவன் .  

சகாவே

வளரும் பிறையே தேயாதே..

மிஸ் யூ தலைவா.

Ashik ahamed

கிரிக்கெட்டை விட்டு விடை பெறலாம். ஆனால், தமிழ் ரசிகர்களின் மனதில்  நீங்கள் என்றும் விடை பெற முடியாது.

முகமது வாழவந்தார்

பந்தை முன்னால் ஓட விட்டு பின்னால் துரத்தும் இந்திய அணியின் ஃபீல்டிங் இன்று உலகத் தரத்திற்கு உள்ளதென்றால் அதற்கான விதை யுவ்ராஜ் போட்டது. இந்திய ஃபீல்டிங்கை யுவ்ராஜுக்கு முன் யுவ்ராஜுக்குப் பின் என்று ஈஸியாக வரையறுக்கலாம் ..

lenin

#YuvrajSingh நீங்க அடிச்ச ஆறு சிக்ஸ் எப்போதும் நினைவில்.... உந்தன் பெயரை இவை ஒலிக்கும்.

சரவணக்குமார். ச

சமீப கால இந்திய அணியில்

#YuvrajSingh களத்தில் இல்லாமல் போயிருக்கலாம்! இந்திய எண்ணங்களில் என்றும் களம் காணுவார்.

வாய்ப்பு இன்னும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக இருந்தது.

அவர் விருப்பம் போல் எஞ்சிய காலம் அமையட்டும்  

நன்றி

தளபதி ரிஷி ツ

இவரோட அருமை 90's Kids-kku தான் தெரியும்❤❤

ஒரு மிகப்பெரிய சகாப்தம் முடிந்தது        

இந்த உலகக்கோப்பை விளையாடி இருந்தா நல்லா இருந்திருக்கும்    

ரைட்டர் இம்ச

கிரிக்கெட் உலகமே கொண்டாடிய தலை சிறந்த ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்

நோய் அந்த மனிதனின் வளர்ச்சியில் தடைக்கல்லாக இருந்துவிட்டது என்பதை மறுக்க முடியாதது.

யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட்டிற்கு ஒரு பொன் மகுடமாக திகழ்ந்தார்..

Ka. Vijayenthiramani

புற்றுநோய் உன்னிடம் தோல்வி கண்டது..

உனது தன்னம்பிக்கை எங்களின் மனதை வென்றது..

சகாவே

யுவி எனும் நாயகன்

Ganesh Rajamani

வரலாறு ஓயாது யுவி , உன் புகழ் யுகம் தாண்டி வாழும்.  

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x