Published : 06 Feb 2019 05:44 PM
Last Updated : 06 Feb 2019 05:44 PM

நெட்டிசன் நோட்ஸ்: 90s Kids Rumors  - அண்டர்டேக்கருக்கு ஏழு உயிர்

சமூக வலைதளங்களில் 90களுக்குப்  பிறகு பிறந்தவர்கள் அவர்களது சிறு வயதில் நம்பிய வதந்திகள் குறித்து  #90sKidsRumors  என்ற ஹேஷ்டேக்கில் டிரெண்ட் செய்து வருகின்றனர். அவற்றைப் பற்றிய தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

கடவுள்

கொஞ்சநாள் கஷ்டப்பட்டு படிச்சா நல்ல காலேஜ்...

கொஞ்சநாள் கஷ்டப்பட்டு அலைஞ்சா நல்ல வேலை...

கொஞ்சநாள் கஷ்டப்பட்டு உழைச்சா நல்ல வாழ்க்கை...ரூமர்ஸ்லயே வாழ்றவனுங்கடா #90sKidsRumors

அசுரன்

ரயில் புழுவைப் புடிச்சு கழனி தண்ணில போட்டா காசு கிடைக்கும்...

ஒத்த மைனா பார்த்தா ஸ்கூல்ல டீச்சர் கிட்ட அடி விழும்...

ரெட்டை மைனா பார்த்தா லக்கு...

ABT கொரியர் சர்வீஸ் வேன பார்த்தா லக்கு வரும்

மாற்றான்

டேய் ஒரு டைம் முட்டுனா தலைல கொம்பு முளைக்கும்

கிட்ட வா இன்னொரு டைம்

முட்டிக்கிற

கருத்து கணேசன்

பாம்ப அடிச்சு கொல்லாம விட்டுட்டா, நம்மல ஞாபகம் வச்சு ஒரு நாள் கொத்திடும்

Sarvs Sagaa

ஒரு ஆட்டோல பிட் நோட்டீஸ வீசிட்டே போவானுக. அத பொறுக்கி எடுத்து படிச்சா பாம்பு நாக மாணிக்கம் கக்குன கதைய போட்ருப்பானுக. இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கேன்னு பார்த்தா கடசில "இதே மாதிரி நோட்டீஸ் அடிச்சு நீயும் பரப்பி விடு இல்லாட்டி செத்து போயிருவ"ன்னு போட்ருக்கும்.

மெத்த வீட்டான்

ஜெயலலிதா 1ரூபாய்தான் சம்பளம் வாங்கினார் !

சுபாஷினி

எந்த ஆபத்தில் இருந்தாலும் சக்திமான்னு சொன்னா வந்து காப்பாற்றுவார்

ஜால்ரா காக்கா

டிவில மகுடி சத்தம் வந்தா மியூட் பண்ணுடா இல்லைன்னா பாம்பு வந்துரும் ~அம்மா     

 

Thozha

Undertakerக்கு ஏழு உயிர்

2003 world cupல spring bat வச்சு ஆஸ்திரேலியா இந்தியாவ தோற்கடிச்சாச்சு

 

ᄊム尺ズ2ズムレノ

ஜெயசூர்யா பேட்டுக்குல்ல ஸ்பிரிங் வச்சு ஆடுனார். அதான் சிக்ஸா பறக்குது நம்புனேன்.  

ஜால்ரா காக்கா

அரிசி தின்னா உன் கல்யாணத்து அன்னைக்கு மழை பெய்யும்

அகரன் (SeenMani)

பாக்க வச்சு தின்பண்டம் சாப்பிட்டா வயிறு வலிக்கும்.  

✯சண்டியர்✯

LBW குடுத்துட்டான்னு சித்து ஒரு அம்பயர ஸ்டெம்ப் வச்சு குத்தி கொன்னுட்டான்..

கருப்பு மன்னன்

பயம் வந்தா  சாமி பாட்டு பாடிக்கிட்டே ஓடணும்.

V I P E R™

இருட்டுல சாப்டா பூதம் வரும் :)

JKK

employment office ... ல பதிவு பண்ணுனா கவர்மென்ட் வேலை கிடைக்கும்.    

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x