Published : 23 Jan 2019 11:28 AM
Last Updated : 23 Jan 2019 11:28 AM

நவீன அடிமைத்தனத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் நடிகர் சூர்யா

 

 

 

ஆள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல், வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட நவீன அடிமைத்தனத்துக்கு எதிராக  நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.

 

இதுதொடர்பான ’ஸ்விட்ச்’ என்னும் குறும்படம் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

மிகவும் பரபரப்பாக இருக்கும் சாலை ஒன்றில் கன் டெய்னர் ஒன்று அநாதையாக நிற்கிறது. உள்ளிருந்து தொடர்ந்து சத்தம் வந்துகொண்டே இருக்கிறது. ஆனால் பாதசாரிகளும் நடைபாதை வியாபாரிகளும் அதைக் கவனிக்காமல் கடந்து செல்கின்றனர். அடுத்த நாளில் பள்ளிச் சிறுமி ஒருத்தி ஓடிவந்து கதவைத் திறக்கிறாள்.. அதைத் தொடர்ந்து என்ன ஆனது? குறும்படத்தைப் பாருங்கள்.

அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், கனடா, போலந்து உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் 'யூ கேன் ஃப்ரீ அஸ்' என்னும் இயக்கம் ஸ்விட்ச்’ குறும்படத்தைத் தயாரித்துள்ளது.  4 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் நவீன அடிமைத் தளைகளில் சிக்குண்டுள்ளனர். ஆள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல், வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துதல் ஆகியவை இதில் அடக்கம்.

 

அவர்கள் நம் கண் முன்னால் இருந்தாலும் கவனிக்கப்படாமல் போகிறார்கள். அவர்களை மீட்டெடுப்போம். ''நீங்கள் மீட்காவிட்டால் வேறு யார் எங்களைக் காப்பாற்றுவது?'' என்று கேள்வி எழுப்புகிறது 'யூ கேன் ஃப்ரீ அஸ்' இயக்கம்.

 

சூர்யா தவிர சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் இந்தக் குறும்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x