Published : 17 Dec 2018 01:14 PM
Last Updated : 17 Dec 2018 01:14 PM

நெட்டிசன் நோட்ஸ்: ராகுல் அவுட் - ‘‘ஆனா நம்மள ஏமாத்தல... அந்த நேர்மை பிடிச்சிருக்கு”

பெர்த்தில் நடந்துவரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்ற பெற 287 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ளது.

முதல் இன்னிங்ஸைப் போலவே 2-வது இன்னிங்ஸும் அதிர்ச்சியான தொடக்கமாக அமைந்தது. மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே கே.எல். ராகுல் க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் கே.எல் ராகுலை  நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். அவற்றில் சில பதிவுகள்.

Story Teller

நான் கூட போன மேட்ச் ரிப்ளேனு நெனச்சிட்டேன் #KLRahul

 

நிலாவன்

ஆனா நம்மள ஏமாத்தல... அந்த நேர்மை பிடிச்சிருக்கு... #KLRahul

 

Arul

தவான் ஆவது ரெண்டு four அடிப்பான் டா

 

@SuDLX

 

என்னது எக்குத்தப்பா பவுன்ஸாகுதா? அப்பறம் ஏண்டா அங்கயே நிக்கறீங்க  ரூம்புல ஏசி இருக்கு வாங்கடா ~ கே எல் ராகுல் மாம்ஸ் pic.twitter.com/1eT0eZF8N2

 

கேபிள் ராஜா

 

ராகுல் செஞ்சுரி எல்லாம் அடிக்கனுமுன்னா ட்விட்டர்ல இருக்க நாம தான் போய் பவுலிங் போடனும்

 

 

Dinesh Kumar

 

பேட்டிங்னு வந்துட்டா போதும் நம்ம ராகுல்... பய சிட்டா அவுட்டாகி பெவிலியனுக்கு போயிருவான்

 

Sreenath

 

ஓ மை ராகுல் மாம்ஸ்.. அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா பாப்போம்  :-(

 

 

Vignesh thala fan

பல வருஷம் கணவுடா. ஒரு டெஸ்ட் சீரிஸ் ஆவது வின் பண்ணுங்கடா ராகுல் & விஜய்  எடுத்ததுக்கு ஜடேஜா எடுத்துருந்தா கூட ரன் & விக்கெட் எடுத்துருப்பான்

 

 

டீ

 

நான் ஐ பி எல்ல ராகுல் பெர்பார்மன்ஸ் பார்த்துட்டு கில்கிறிஸ்ட் ரேஞ்சுன்னு ட்விட் போட்டேன். அந்த விரல வெட்டி சமயபுரம் மாரியம்மனுக்கு காணிக்கை கொடுத்துட்டு அப்படியே அந்த ட்விட் பண்ண மொபைல்ல சிதறுகாய் போட்டுட்டு வரணும்.

 

Gemini

 

இந்த ராகுல் கிட்ட கோலியை அப்படி ஹெவியா லைக் பண்ண வச்சதுந்னு தெரியலியே! இவனத்தான் சேர்ப்ப்பேன்னு அடம்!

 

கண்ணன்

 

இதே எண்ணத்தோட ஐபிஎல்லுக்கு வந்துறாதீங்க. அங்க நான் உக்கிரமா இருப்பேன். ~கே.எல்.ராகுல் மாம்ஸ்.

 

Penathal Suresh

 

 

அடுத்த 15 நிமிஷத்துல ஃப்ளைட் பிடிச்சு வீடு வந்து சேரு ராகுல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x