Published : 11 Dec 2018 03:31 PM
Last Updated : 11 Dec 2018 03:31 PM
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் 'அடிச்சுத் தூக்கு' என்ற பாடல் நேற்று (டிசம்பர் 10) வெளியானது. இப்பாடலை அஜித் ரசிகர்கள் கொண்டாடியும், விமர்சித்தும் வருகிறார்கள்.
அவற்றின் சில தொகுப்புகள் ...
frank
ரஹ்மான் மாதிரி நம்மள நம்பவச்சு ஏமாத்தல. நெனச்சமாதிரியே கேவலமா போட்டுட்டார் இமான்
Rage Thug
எல்லாத்தயும் ஏத்துக்குவேன் இந்தப் பாட்டுக்கு டெய்லி எங்கள அப்டேட் கேட்டு கெஞ்ச விட்ட தெரியுமா அத மட்டும் மறக்கவே மாட்டேன்டா..
புதுவை குடிமகன
சிம்டாங்காரனுக்கும் இப்டிதான் சொன்னானுங்க. ஆனா. ஹிட்டாச்சுல்ல அதுமாதிரி இதுவும் ஹிட் அடிக்கும்.
கரடிமுத்து
தல பாக்க பக்கா எனர்ஜிடிக்கா இருக்காரு
இந்தப் பொங்கல் தல பொங்கல் தான்
உள்ளார எப்போதும் உல்லாலா உல்லாலா
4 நிமிஷம் இவ்ளோ நீளமாவா இருக்கும்னு யோசிக்க வைக்குறாப்ல இமான் மாம்ஸ் அழகா பாட்டு போட்ருக்காப்ல
சிலுக்குவார்பட்டி சேட்டு
அடிச்சு தூக்கு அடிச்சு தூக்கு....
ரிப்பீட் மோடு
எத்த வாட்டி கேட்டேன்னு தெர்ல
நேத்துல இருந்து கேட்டுட்டிருக்கேன் செல்லே சுவிட்ச் ஆப் ஆயிருச்சு
திமிரு பிடிச்சவன்
தல ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்ல இந்தப் பாட்டு...
அனலா இருக்கும் தியேட்டர்ல.. புக்கிங் எப்பனு பாருங்கடா
TonyStark™
ஆலுமா டோலுமா பாட்டுலாம் கடந்த 3வருஷமா ஊர் திருவிழா, கல்யாணம், காலேஜ் பங்க்ஷன்னு எல்லா இடத்துலயும் களை கட்டுன பாட்டு, அது இனிமே கொஞ்சம் கஷ்டம் தான் ஏன்னா #AdchiThooku தெறிக்க விடப் போகுது, கண்டிப்பா எல்லா கோயில் திருவிழாவுலயும் அதகளப்படுத்தும்.
ட்விட்டர்
இத்தனை பேர் மிகவும் ஆவலாக எதிர்பார்க்கும் போது இவ்வளவு மொக்கையாப் பாட்டு ரிலீஸ் பண்றதெல்லாம்... அன்பின் சிவா.....
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT