Published : 06 Dec 2018 03:14 PM
Last Updated : 06 Dec 2018 03:14 PM

நெட்டிசன் நோட்ஸ்: நெல் ஜெயராமன் மரணம் - மனித சமூகத்துக்கான இழப்பு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி இன்று ( வியாழக்கிழமை)  அதிகாலையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது இறப்புக்கு நெட்டிசன்கள் தங்கள் இரங்கலைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Jayaprakash

‏இன்று 6.12.18 காலை 5.10 மணிக்கு #நெல்_ஜெயராமன் காலமானார்.

ஆம்..பூமித்தாயின் மகன் நெல் ஜெயராமன் நம் மண்ணில் இன்று விதைக்கப்பட்டார்.

சசிதரன்

‏பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுத்த #நெல்_ஜெயராமன் மறைவு இயற்கை விவசாயிகளுக்கு ஏன் இந்திய விவசாயத்துக்கே ஓரு இழப்பு...

Ilakkiyaselvan Ganesan

‏வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் - என்று வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலார்.

அது போல பாரம்பரிய விதை காப்பாளர் நெல் ஜெயராமன் இழப்பைக் கண்டு வாடினேன்

salma

‏நெல் ஜெயராமன் இழப்பு மனித சமூகத்திற்கான இழப்பு. அஞ்சலிகள்

வினோத்

‏பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்து தந்த சாமி,  ஐயா நெல் ஜெயராமன் மறைந்தார்.

Vigneshwaran

‏விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்காது.

Akwin Lopez

‏தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த, மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராகப் போராடிய நெல் ஜெயராமன்  இன்று இம்மண்ணிற்கு விதையானார்...

Tharun Kumar

‏சிறந்த விவசாயியை நாம் இழந்து விட்டோம்.... #நெல்_ஜெயராமன்  

மண்ணின் மகத்துவ மனிதரை மனதில் ஏந்துவோம்!

Senthilnathan.P

நெல் ஜெயராமன் ஆற்றிய சமூகப் பணி அவரை என்றும் நினைவில் நிறுத்தும். எமது ஆழ்ந்த இரங்கல்.

skpkaruna

உ.வே.சா அலைந்து திரிந்து தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகளை மீட்டெடுத்ததைப் போல நெல் ஜெயராமன் தேடி தேடி நமது பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்தார்! தமிழகம் நெல் ஜெயராமனுக்கு பெரும் நன்றிக் கடன் பட்டுள்ளது. அவர் எனக்களித்த 4 கிலோ கிச்சலி சம்பா பல நூறு கிலோவாக மாறியது. ஆழ்ந்த இரங்கல்.

STRist

தமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக் கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்து பாதுகாத்த நெல்.ஜெயராமனின் மறைவு  நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும் செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும்.

பாசமறியான்

#நெல்ஜெயராமன்

அய்யாவின் உழைப்பு ஈடு இனையற்றத

PkPraveen

#RIPNelJeyaramanAYYA

நம் நெல்லை நமக்காக பாதுகாத்த தெய்வம்!

Tirumular Arakkattalai

நம் சமகாலத்து வள்ளலார் = நெல் ஜெயராமன் இறை நிழலில் இளைப்பாறட்டும்!!

Bala Chakravarthi

நெல்லுக்கு புற்றுநோய் வந்தது

பூச்சி மருந்து அடித்தோம்...

நெல் மீட்டவனுக்கு புற்றுநோய் வந்தது

போஸ்டர் அடிக்கிறோம்..!

மீட்டெடுத்ததை காப்பதே ஜெயராமனுக்கு செய்யும் நல்தொண்டு..!

ஆழ்ந்த இரங்கல்

Raasi Thangadurai

அய்யா ஜெயராமன் என்ற விதை நெல் விதைக்கப்படும்... அதிலிருந்து பல இளம் நெற்பயிர்கள் முளைக்கும்...!

Meeran Mohamed

பதர்கள் பல்லாயிரம் வாழ்ந்திருக்க...

நற்பயிரைப் பறிப்பது தகுமோ..

பதருக்கும்

பயிருக்கும்

வித்தியாசம் தெரியாமல்

போய்விட்டதே....

பாழாய்ப் போன புற்றுநோய்க்கு...

CMahendran Mahendran

காலம் இட்ட கட்டளையை ஏற்று, இன்று பல புதிய தலைவர்கள் தோற்றம் பெற்று வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் நெல் ஜெயராமன். கார்ப்பரேட் ஒரு மாபெரும் பேரழிவாக, தொன்மை மிகுந்த தமிழக விவசாயத்தின் மீது தாக்குதல் நடத்திய போது, அதை எதிர்த்து புறப்பட்டவர்தான் பசுமைப் போராளி நம்மாழ்வார். அந்த நம்மாழ்வாரின் வழி தொடர்ந்து, கார்ப்பரேட் ஆதிக்கத்திலிருந்து நெல் மணிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்தவர், நெல் ஜெயராமன். அவருடைய மரணம் பேரிழப்பு. அவருக்கு என்னுடைய அஞ்சலியை நான் செலுத்திக் கொள்கிறேன். அவர் விட்டுச் சென்ற பணியை இன்றைய இளைஞர் உலகம் முழுமையாக மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை அவர் பெயரால் கேட்டுக்கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x