Published : 04 Oct 2018 05:58 PM
Last Updated : 04 Oct 2018 05:58 PM

பெட்ரோல் விலை குறைப்பு: யானை பசிக்கு சோளப்பொறி- நெட்டிசன்கள் விமர்சனம்

அதிகரித்துவரும் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், இதேபோல மாநில அரசுகளும் வரிகளைக் குறைக்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 10 ரூபாய் விலையை ஏற்றிவிட்டு வெறும் 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்துள்ளனர். அவற்றில் சில பதிவுகள்

Junitha

‏விலை ஏற்றத்தில் இருந்து விடிவு வேணும்னு கேட்டால், 2.50 குறைத்து துக்கம் விசாரிக்குறாங்க.

யானை பசிக்கு சோளப்பொறி.

Hasan Kalifa

‏இதுவரை மத்திய வரிகளில் ஏற்றின ₹15ஐ குறைப்பதே மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும். #Petrol

Rajkumar Lotus

‏பெட்ரோல் டீசல் விலை Rs 2.50 குறைப்பு மத்திய அரசு இன்று முதல் அமல்... மற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மாநில அரசுகளும் Rs 2.50 விலை குறைப்பு ஆக மொத்தம் 5.00 விலை குறைப்பு... தமிழக அரசும் விலை குறைப்பு செய்யுமா ?...

கிப்சன்

‏பிறந்தநாள் பரிசாக புத்தகம்  குடுப்பதை விட ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி குடுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ... !

Rajaa Rajaa

‏பெட்ரோல் டீசல் வெல ஏறும் போது  பணக்கார கைல போகும் நோட் போலவும்

குறையும் போது பிச்சக்காரன் தட்டுல விழுற சில்லரை போலவும் 

2.5 பைசா குறைவு

Thangadurai Sivan

‏உற்பத்தி வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைகிறது...

SKP KARUNA

‏எப்போ பாரு பஜகவின் அடிமை அரசுன்னு சொல்லிட்டே இருந்தோமா! இப்போ பாருங்க! மத்திய அரசு சொல்லி நாங்க பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாதுன்னு சொல்லப் போறாங்க!

BALAJI VENKATRAMAN

‏மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான விலை குறைப்பு அறிக்கை

 அப்பாவி

‏தேர்தல் நேரத்துல கண்டிப்பா பெட்ரோல் விலை கட்டுக்குள் இருக்கும்ன்னு தோணுது. இதே விலையில்( $76.25) கச்சா எண்ணெய் இருந்தா ருபாய் 70 முதல் - 75 வரை பெட்ரோல் விலையாக இருக்கும்.

ramanan

‏ஒரே மாதத்தில் பத்து ரூபாய்க்கு மேல ஏத்திட்டு இப்போது ரெண்டு பேர் சேர்ந்து 2.50 குறைப்பு.இதில் மாநில அரசுகளிடம் கெஞ்சல் வேற.GSTக்குள்ள  கொண்டு வர வேண்டியதுதானே. ரெண்டு நாள் கழித்து மீண்டும் கிடு கிடுகிடுவென உயராதா?....

கொஸக்ஸி பசப்புகழ் #மதராசபட்டினம்

‏பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசா குறைத்தது மத்திய அரசு..

  வைத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்    

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x