Published : 04 Oct 2018 04:25 PM
Last Updated : 04 Oct 2018 04:25 PM

நெட்டிசன் நோட்ஸ்: 96 திரைப்படம் - பள்ளியில் காதலித்தவர்களை அழ வைக்கும்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஒளிப்பதிவாளரான பிரேம் குமார், இயக்கத்தில் வெளியாகியுள்ள ’96’ திரைப்படத்தை பற்றிய தங்களது கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

சாமானியன்

‏காதலே காதலே சாங் #பிலேஸ்மன்ட்

கண்ணுல தண்ணியே வந்துட்டு...

Sathish K Vasu

‏இந்த இறுக்கம், தந்த, அவளுக்கும் அவருக்கும் அவர்களுக்கும் என் நன்றிகள்..

karpagam Mahi

‏எங்க இருக்க ?

ரொம்ப தூரம் போய்ட்டியா ?!

உன்ன எங்க விட்டனோ

அங்க தான் இருக்கேன்...

Prasanna V K

‏ஸ்கூல் லைஃப் திரும்ப போனும் போல இருக்கு

Arun Karky

‏ஜனனமும் மரணமும் போல ஜானுவும் ராமும் ஒரு அனுபவமே    வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவித்து விடுங்கள்

kishore

‏காதல் மழையில்! ❤️

சிம்ராங்காரன்   

‏Jessie வே நாங்க இன்னும் மறக்கல்ல. அந்த Characterஇன்னும் மனசுல இருக்கு. இப்ப இந்த ஜனு. உங்களோட life Goala Achieve பன்னிட்டீங்க எங்க மனசுல.

கார்த்திக்_ஹைக்கூ

‏பள்ளி பருவ காதலே மீண்டும் மயில் இறகுகளால் வருடுவது போல் வருடுகிறது இந்த #l நடிப்பு மிக அற்புதம். படத்தில் வரும் காட்சிகள் நம் பள்ளிகூடத்தில் இருப்பது போல் தோன்றும். மிக சிறந்த ஒரு காதல் படைப்பு

காட்டான்

‏பல இடங்களில் கண்ணில் நீர் கோர்தது . இரண்டாம் பாதி ரெம்ப slow . நல்ல படம் . முக்கியமா 90 முன் பிறந்தவர்களூக்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும். கூடுதல் சந்தோஷம் நான் படித்த பள்ளியில் இந்த படம் எடுக்கப்பட்டது......#96TheMovie

SKP KARUNA

‏ஒரு நல்ல படம் வெளியாகி இருக்கும் போலிருக்கு! இந்த நேரத்துலே விடாத அடை மழை பெய்கிறது எனில்., பாவம் அந்தத் தயாரிப்பாளர்! வேறெண்ணும் சொல்றதுக்கில்லை. தமிழ் சினிமா தயாரிப்பாளரா இருப்பதைப் போலொரு சாபம் வேறேதுமில்லை.

PrasannaGovindarajan

‏இந்த அழகான மழையோட #96Themovie படத்தை அனுபவிக்குறது

karpagam Mahi

‏காதல் தயங்கும்.

காதல் சிரிக்கும்.

காதல் கலங்கும்.

காதல் குழப்பும்.

காதல் ஓரளவுக்குப் புரியும்.

காதல் விலகும்.

காதல் பிரியும்.

கதவுகளை மூடாமல் வழியனுப்பி வையுங்கள்.

Kolahalan.R

‏காதலும் காமமும் ஒரு சேர கலந்து விட்ட இந்த காலத்தில், காதல் எப்படி ஒழுக்கமாக  இருக்க வேண்டும் என்பதை இப்படம் உணர்த்துகிறது...

Gomesh Shanmugavelayutham

‏பள்ளியில் காதலித்தவர்களை அழ வைக்கும். காதலிக்காமல் விட்டவர்களை ஏன் தவறிவிட்டோம் என ஏங்க வைக்கும்

hedeaffrog

‏எழுதினது கவிதையா இல்லை இசைத்தது கவிதையா.??? 

"வாழா

என் வாழ்வை வாழவே

தாழாமல் மேலே போகிறேன்..

தீரா உள் ஊற்றை தீண்டவே

இன்றே இங்கே மீள்கிறேன்

இங்கே இன்றே ஆள்கிறேன்..."

Mathi Vanan

‏எழுதப்படாத கவிதை... வரையப்படாத ஓவியம்...

#தொண்ணுற்றாறு

கிங்மேக்கர் ..♔

‏விஜய்சேதுபதி, பக்ஸ், ஆடுகளம் முருகதாஸ், குறிப்பா தேவதர்சினி பர்பாமன்ஸ்        பிளாஷ்பேக் ராம், ஜானு          குறிப்பா அந்த ஹார்ட்பீட் ஸீன்         இன்டர்வல் வர செம்மயா இருக்கு

MSK

‏ராஜா சார் பாடல்கள் .....sema clap

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x