Published : 04 Oct 2018 02:28 PM
Last Updated : 04 Oct 2018 02:28 PM

நெட்டிசன் நோட்ஸ் - கோலிக்கு அப்படி எதுவும் நடக்கலையேனு யோசிச்சேன்.. இதோ பிரித்வி ஷா

மேற்கு இந்திய நாடுகளுடனான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் இந்திய துவக்க வீரரகாக களமிறங்கி தனது முதல் போட்டியிலேயே சதத்தை பதிவு செய்திருக்கிறார் இந்திய அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷா.

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே முதல் சதத்தை பதவி செய்த பிரித்வி ஷாவுக்கு நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்தை பதிவு செய்து வருகின்றன. அவற்றில் சில பதிவுகள்.

 

Delan Adikari

ஒரு இளம் வீரருக்கு அற்புதமான தொடக்கம்.. சிறப்பான ஆட்டம்

விஷ்வா

‏#புஜாரா "எப்போதும் போல" விளையாடுகிறார்.

#பிரித்விஷா "சிறப்பாக" விளையாடுகிறார்.

Arun Venugopal

‏That இளம் கன்று பயம் அறியாது saying has seldom been truer #PrithviShaw

Viswasam

‏வாருங்கால லிட்டில் மாஸ்டர் #PrithviShaw  

ரோபல்காந்த்

‏கருன் நாயர் to பிரத்திவ் : 300  க்கு மேல அடிச்சிறாத அப்புறம் டீம்ல எடுக்க மாட்டானுங்க

Ram Durgesh

‏கிரிக்கெட்டில் கவாஸ்கர் எனும் சகாப்தம் முடியுற நேரத்துல தான் சச்சினோட என்ட்ரி

ஒரு சச்சின் இருக்கும் போதே கோஹ்லியோட என்ட்ரி..

கோலிக்கு அப்படி எதுவும் நடக்கலையேனு யோசிச்சேன்.. இதோ வன்ட்டான் பிரித்வி ஷா

Umesh Kesavan

‏கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது #PrithviShaw #INDvWI

பகைவன்

‏18 வயசுல இண்டர்நேஷனல் மேட்ச்ல 100 அடிக்கான்.

P Surendar

#INDvWI டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பிரித்வி ஷா அன்புடன் வரவேற்கிறோம் முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி சதத்தை பூர்த்தி செய்து உன்னுடைய திறமையை நிரூபித்து விட்டாய் மேலும் பல சதகங்கள் தொடர வாழ்த்துக்கள்

 சேவிதா  

‏பிரித்வி ஷா துடுப்பாட்டம் பார்க்கும்போது மகேல ஜெயவர்த்தன போலவே இருக்கு

தோற்றமும் அவ்வாறே.. யாருக்கெல்லாம் இப்படி தோணுது எனக்குமட்டும்தானா

செந்தில் வேல்  

‏வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

வாழ்த்துக்கள்....

K7

‏பிரிதிவி ஷா இருக்கிற பார்முக்கு  இந்த பிட்ச்ல இருநூறு அடிச்சா கூட சாதாரண விசயம் ரிப் வெ.இண்டீஸ் ...!

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x