Published : 01 Oct 2018 02:37 PM
Last Updated : 01 Oct 2018 02:37 PM

நெட்டிசன் நோட்ஸ்: பிக் பாஸ் 2 வின்னர் ரித்விகா - ஆடாம ஜெயிச்சோமடா

'பிக் பாஸ் 2' நிகழ்ச்சியின் வின்னராக ரித்விகா வெற்றி பெற்றிருக்கிறார். இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்தையும், கருத்தையும் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

rajalakshmi

‏ரித்விகா winner ஆனவுடன் உலகநாயகன் காலில் விழாமல் நெஞ்சில் புதைந்து ஆனந்தக் கண்ணீர் விட்டது நெகிழ வைக்கும் காட்சி.

uthyakumar kandeepan

‏திமிரைத் தோற்கடித்த

#வெற்றி

பொறுமைக்கு கிடைத்த

#வெற்றி

அமைதிக்கு கிடைத்த

#வெற்றி

தமிழ் பண்புக்கு கிடைத்த

#வெற்றி

நற்குணத்துக்கு கிடைத்த #வெற்றி

அன்புக்கு கிடைத்த

#வெற்றி

Karthik

‏முன்பே தீர்மானிக்கப்பட்ட வெற்றி.....

வாழ்த்துகள் ரித்விகா சகோதரி.....

சரவணன் Ucfc

‏அப்பாடா ரித்விகா ஜெயிச்சிருச்சி      அமைதிக்கும் நேர்மைக்கும் அழகான வெற்றி.

Porkodi selvaraj

‏ரித்விகா!! வாழ்த்துகள்!!!!!!

நீ நீயாக உண்மையாக  இருந்தாய் கண்ணே! வெற்றிக்கான காரணம் இதுதான்!!!இது மட்டும்தான்!!!

அத விட்டுட்டு ஸ்ட்ராட்டஜி அது இதுன்னு திட்டம் போட்டுக்கிட்டு...????

அரசியல்வாதிகளுக்கும் இது பொருந்தும்!!!

வெற்றிவீரன்  

‏எங்கு பேச வேண்டும்

எப்படி பேச வேண்டும்

எதற்காக பேச வேண்டும்

எவ்வளவு பேச வேண்டும்

என்ற யுக்தியை வரையறை வைத்துக்கொண்டால் இந்த உலகம் உன்னையும் வெற்றியாளராய் உணரும்  #வாழ்த்துகள்_ரித்விகா

D E E P A N

‏நேர்மை பணிவு உண்மை வெற்றி தரும்.... சகோதரி ரித்விகாவிற்கு வாழ்த்துகள்.

SPARTAN™

‏திரும்பவும் சொல்றேன் போட்டியில திறமையை வெளிப்படுத்தி ஜெயிக்கணும்.. அடுத்தவங்க முதுகுல ஏறி சவாரி செய்யக்கூடாது.. ரித்விகா பிக் பாஸ் டைட்டிலுக்கு 100% பொருத்தமற்றவர்

தமிழ் பொண்ணு தான் ஜெயிக்கணும்னா எதுக்கு போட்டி.

 

 

PillathirajRishvanth (SPR)

‏அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்!  

எடுத்துக்காட்டு: ரித்விகா

சாரி, ஜெயித்துக்காட்டிய ரித்விகா

நெல்லைச்சீமை/NELLAIseemai

‏நேர்மை ஹமாம் சோப்புக்கு இருக்கோ என்னமோ,

பிக் பாஸ் வின்னர் ஆகனும்னா நேர்மை, பொறுமை வேணும்.

வாழ்த்துக்கள் #Riythvika

தமிழச்சி  ⚡

‏ஒரு வழியா ட்ராபி ரித்விகா வாங்கிட்டா, கமல் சார் ரித்விகா அம்மாகிட்ட ட்ராபிய எடுத்துக் கொடுத்தாரு. நல்ல வளர்ப்புக்கு கொடுக்குற பரிசா நினைச்சாரோ என்னவோ!

G M P CHiyaaN

‏வெற்றி மகுடத்தை நேர்மையின் அழகு சிலை ரித்விகாவின் தலையை அலங்கரித்தது வாழ்த்துகள்.

தமிழன்

‏ரித்விகா உங்களுக்குக் கிடைத்த வெற்றியானது உங்களின் நல்ல எண்ணத்திற்கும், நேர்மைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த வெற்றி.

இப்போது இருப்பது போல் எப்போதும் இருங்கள்.

நீங்கள் வாழ்வில் மேன்மேலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

Selva kumar 

‏இந்நிகழ்ச்சியின் இறுதியில் உண்மை வெற்றிபெற்றதில் மகிழ்ச்சி!

Nirmal Kumar

‏யார் காலிலும் விழாத சுயமரியாதையும் , எல்லோரையும் சமமாகப் பாவித்த பொதுவுடமையும், பிக்பாஸிலும் இனி வரும் காலங்களிலும் தமிழ்ப் பெண்களுக்கு நீ பெற்றுக் கொடுத்த இட ஒதுக்கீடும், கள்ளம் கபடம் இல்லா அந்தச் சிரிப்பும் #Riythvika'விடம் எனக்கு மிகவும் பிடித்தவை..

சிற்பன் O+VE

‏'ஆடாம ஜெயிச்சோமடா' இந்த ரித்விகாவுக்கு பொருத்தமான பாட்டு...

#BiggBossTamil2 நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த பெண் மெதுவாக தன் நேர்மை,திறமை இதனை உலகிற்கு வெளிப்படுத்தி வெற்றி அடைந்து தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

வேடிக்கை பார்ப்பவன்

‏ரித்விகாவின் பேச்சு மிக அருமை.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x