Published : 17 Aug 2018 03:44 PM
Last Updated : 17 Aug 2018 03:44 PM

நெட்டிசன் நோட்ஸ்: வாஜ்பாய் - அரசியலில் உயர்ந்த பண்பாளர்

பாஜகவின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானார். இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

 

ஆழ்வார்கடியான்

‏லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புக்கு வருடக் கணக்காக காத்திருக்கும் நிலையில்தான் காங்கிரஸ் அரசுகள் நம் மக்களை வைத்திருந்தன. அதை துரிதப்படுத்தி தொலைத்தொடர்பு புரட்சிக்கு வித்திட்டு, இன்று  குப்பனும், சுப்பனும் செல்போன் பேச பிள்ளையார் சுழி போட்டவர்

  ரௌத்திரம் கார்த்திக்

மகாகவி பாரதியின் பாடலை நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டி வாஜ்பாய் பேசிய காட்சி

 

Saram Ranganathan

‏"கார்கில் "கதாநாயகன்,"பொக்ரான்"பேரரசன்

"தங்கநாற்கர சாலைகள்" தந்த தூயமனிதன்,

*எம்தமிழன் "அய்யா அப்துல்கலாமை*

*இந்தியஜனாதிபதி"யாக அழகு பார்த்து,*

எம் "சின்னத்தாய்"காலில் விழுந்து வணங்கிய

*அடல் பிகாரி வாஜ்பாய் "எனும் அற்புதமான*

தலைவருக்கு...... அஞ்சலி..

Renu Gopal V

‏வாஜ்பாய்க்காக கடையடைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை ...

ஆனால் அதை மக்கள் தானாக செய்யவேண்டும் !

Umari Suresh

‏பாரதத்தாயின் தவப்புதல்வர் அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவு தேசத்தின் இழப்பு

Ravichandran Rangaraj

‏கார்கில் நாயகர் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவை தலைநிமிர செய்த தங்க நாற்கர சாலை நாயகர்....

Ma.Venkatesan

‏பழங்குடி மக்களுக்காக முதன்முதலில் பழங்குடியினர் அமைச்சகம், தனி அமைச்சர், தனி பட்ஜெட் ஒதுக்கீடு செய்து கொடுத்தவர் வாஜ்பாய்.

விசுவாசமான கோகுல்        

‏தன் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்றவுடன் பொறுப்பை அத்வானியிடம் ஒப்படைத்து விட்டு அரசியலில் இருந்து 2005 ஆம் ஆண்டு விலகியே இருந்தார் வாஜ்பாய்...

kalanidhi

‏தென் இந்தியாவில் வலதுசாரிக் கொள்கை உடைய கட்சியைச் சார்ந்த ஒருவருக்கு இவ்வளவு மரியாதை இருப்பது வாஜ்பாய் ஒருவருக்குதான் ...!

Somasundram

‏அடல் பிகாரி வாஜ்பாய் சிறந்த மனிதர். கண்ணியமானவர். இந்திய அரசியலில் உயர்ந்த பண்பாளர். பதவிக்குப் பெருமை சேர்த்தவர். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

kalanidhi

‏கட்சி மூலமாகத்தான் தலைவர்கள் தெரிவார்கள். ஆனா வாஜ்பாய்க்கு அப்புறம்தான் கட்சியே தெரிஞ்சது ...!

அன்புடன் கதிர்

‏பிரதமர் பதவியில் இருந்த போதிலும் மக்கள் வாழ்க்கைத் தரம் முன்னேற பாடுபட்ட மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஆசி பெற்ற எளிமைத் தலைவர் வாஜ்பாய்.

சண்டியர்

‏கார்கில் போர், அணு ஆயுத சோதனை, அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கியது, பெருநகரங்களை இணைத்த தங்க நாற்கர சாலை என பால்ய வயதுகளில் தேசத்தை நினைத்து பெருமைப்பட வைத்தவர் வாஜ்பாய்.

அதனால் தான் நேற்றைய சுதந்திர தினத்தை விட இன்றைய அவர் மறைவு இந்தியனாக உடைந்து அழச் செய்கிறது..

Ashokha Varshini

‏மரணத்தின் வயது என்ன

இரண்டு கணம் கூட இல்லை!

வாழ்க்கையின் தொடர்ச்சிகள்

இன்று நேற்று வந்தவை அல்ல!

வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று!

மனத்தைத் தொலைத்துவிட்டு

மீண்டும் நான் வருவேன்!

கேவலம் மரணத்திடம் ஏன்

பயம் கொள்ள வேண்டும்?

 #வாஜ்பாய்

sathishkumar

 ‏13நாளில் மெஜாரிட்டி இல்லாமல் அரசு கவிழ்ந்த தினம் வாஜ்பாய் ஆற்றிய நாடாளுமன்ற உரை மெய்சிலிர்க்க வைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x