Published : 16 Aug 2018 02:30 PM
Last Updated : 16 Aug 2018 02:30 PM

”இங்கு உணவு  இல்லை”- கேரள அவலத்தை உணர்த்தும் பழங்குடி சிறுமி

கேரளாவில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டித்தீர்த்து வரும் கனமழை, நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 25 பேர் பலியாகியுள்ளனர். பல பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இடுக்கி போன்ற மழைவாழ் இடங்களில் வசிக்கும் பழங்குடியினர் உணவில்லாமல் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியினரின் நிலையை விளக்கும் வகையில் சுதிப் சுதாகரன் என்ற ட்விட்டர் கணக்காளர் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு ள்ளார். அதில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர், பழங்குடியினரின் பகுதிக்குள் செல்கிறார்.

அங்குள்ள சிறுமியிடம் உணவு இருக்கிறதா என்று கேட்க, அந்தச் சிறுமி "இங்கு உணவு இல்லை என்று மயக்கம் கலந்த புன்னகையுடன்  கூறுகிறார்... இரவிலும் உணவு உண்ணவில்லை" என்கிறார்.

உடனடியாக அந்த இளைஞர் நீங்கள் இங்கேயே இருங்கள்  நான் உணவு கொண்டு வருகிறேன் என்று தெரிவிப்பதோடு அந்த வீடியோ முடிகிறது.

 

— Sudeep Sudhakaran (@SudeepSudhakrn) August 15, 2018

 

இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து கேரளாவுக்கு உதவுங்கள் என்று கேரள அரசு குறிப்பிட்டுள்ள https://donation.cmdrf.kerala.gov.in/ இணையதளப் பக்கத்தை குறிப்பிட்டுப் பகிர்ந்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x