Published : 08 Aug 2018 12:46 PM
Last Updated : 08 Aug 2018 12:46 PM

நெட்டிசன் நோட்ஸ்: மெரினா - போராடியே வென்றார் கலைஞர்

மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிடன் நோட்ஸில்…

SANA 

‏இந்த நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்துள்ளது...

கடற்கரைக்குத்தானே அழகு..

சூரியன்

அங்கு

மறைவது!

jagaveera

‏படுத்துக்கிட்டே ஜெயித்தது எம்.ஜி.ஆர்.

இறந்த பின்பும் ஜெயித்தது கலைஞர்.

Arunkumar Alagesan

‏மரணம் ஏற்ற கடை பொழுதிலும் சேப்பாக்கத்தில் ஒரு வெற்றி

Silambarasan

‏கனத்த இதயத்தோடு அழுகையையும் அடக்கிக் கொண்டிறுந்தேன்... நீதி வென்றது.. கண்ணீர் ஆறு பெறுக்கெடுக்க மன ஆறுதலோடு நான்.

M

‏தன்னோட சாவக்கூட இத்தனைக் கொண்டாட்டமாக்க தலைவனாலதான் முடியும்.

Natraj

‏நேற்று எடப்பாடி அனுமதித்திருந்தால் கூட

வரலாறு தவறாக பேசியிருக்கும்.

இறுதி  ஊர்வலம் வரை வென்ற வரலாறு. 

கலைஞர் வரலாறு.

புதியவன்

‏நீ கற்றுக்கொடுத்த போராட்டம், அதை கையிலெடுத்து  உனக்கே இடஒதுக்கீடு வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

SKP KARUNA

‏யார் கருணையாலும் அல்ல!

எவர் தயவாலும் அல்ல!

எப்போதும் போல

போராடியே வென்றார் கலைஞர்.

கர்ணாசக்தி

‏இனி ஒவ்வொரு நாளும் மெரினாவில் இரட்டைச் சூரியன் உதிக்கும்.

#உதயசூரியன் டா  

 

 

Director RanjitJeyakodi

‏நிஜாமாகவே ., படுத்துக்கொண்டே ஜெயிக்கிறதுனா என்னனு தெரியுமா.? இதான் 

மு.க

‏இந்த நாள்… இந்த துரோகம்…இந்த வெற்றி...  இன்னும் நூறாண்டுகளுக்கு திமுகவை வேர்பிடித்து  வாழ வைக்கப்போகிறது. இந்த மண்ணில் அரசியல் பாயும் திசையை எப்போதும் உங்களால் கணிக்க முடியாது என்பது இன்னொரு முறை நிரூபணமானது.

கிறுக்கு கவிதா

‏பள்ளியில் சேர இடம் மறுக்கப்பட்டபோது ஊர் பொது குளத்தில் உயிர் துறப்பேன் என போராடி இடம் பெற்ற மனிதன் இன்று இறந்து மெரினாவில் இடத்திற்காக போராடுகிறார். இதிலும் அவருக்கே வெற்றி.

Prabhakaran Sivapragasam

‏வென்றான் சுயமரியாதை காரன் என்று எழுதப்படட்டும் வரலாறு....

ஒற்றன்

‏மரித்த பின்பும் ஒருரால் மகிழ்வை தர முடியும் என்றால் அவர் தான் கலைஞர்.

அஜ்மல் அரசை

‏சுயமரியாதை பகலவனுக்கு ஏற்பட்ட சிக்கலை அவர் கற்றுத்தந்த சுயமரியாதையை இழக்காதவாறு அவரின் வழியிலேயே போராடி வெற்றியும் பெற்று உரிமையை நிலைநாட்டியிருக்கிறார் கலைஞரின் தவப்புதல்வன் தளபதி ஸ்டாலின்.

Siva Ganesh

‏இறப்பைவிட

தீர்ப்புதான்

அதிகக் கண்ணீரை வரவழைக்கின்றது...

எமக்கு எல்லாம் தந்த

தலைவருக்கு

உறங்க இடம் பெற்றுத் தந்துவிட்டோம்...

பழூரான்

தலைவர் கலைஞருக்காக நீதிபதி சுந்தர் வாதிடுகிறார் .. அவர்கூட

முதல் தலைமுறை பட்டதாரியாக இருக்கலாம் .. இட ஒதுக்கீட்டால் பயன்பெற்ற நீதிபதியாக இருக்கலாம்..

Ijaz Qadir

‏அண்ணா நிழலில் தம்பி..

போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

kutty

‏இறந்த பின்பும் 'இடஒதுக்கீட்டில் ' வெற்றி கண்டு விட்டாய் ,   உன் விருப்பப்படி அண்ணாவுடன் உறங்கு   அங்கும் தமிழ் மழுங்கி இருந்தால் செம்மை படுத்து      சென்று வா ✋

லதா சம்பத்குமார்

‏மறைந்த பிறகும் வெற்றி பெற்றவர் கலைஞர்

தமிழகத்தை ஆள்வதற்கு தளபதிக்கு  கிடைத்த முதல் வெற்றி

Muthu Bharathi

‏மெரினாவை வென்ற வெற்றியல்ல உன் வெற்றி,

அவ்வெற்றியை கொண்டாட முடியாமல் கண்ணீரில் மழ்கும் மகனை பெற்றெடுத்ததே உன் வெற்றி,

முழக்கங்கள் எழ உன் முகத்தை கண்டு துக்கத்தில் மூழ்கும் மக்களின் மனதை வென்றதே உன் வெற்றி.

சக்திமான்

‏துக்கத்திலும் சிறு புன்னகையை பரிசளித்த கலைஞர்.

ஆல்தோட்டபூபதி

‏துக்கத்தோட போக வேண்டிய நாள். ஆனா இப்ப, ஜெயிச்சோம்னு திமிரோட சந்தோஷமா கலைஞரை வழியனுப்புவாங்க திமுக தொண்டர்கள். சின்னபுத்திக்காரர்களுக்கு நன்றி

நர்சிம்

‏ஸ்டாலின் :((( நல்ல தலைவரோ இல்லையோ, நல்மகன். தலைமகன். எவ்வளவு ஏளனங்கள் அனைத்தையும் இடக்கையால் தவிர்த்து இறுதிவரை தந்தையின் உடனிருந்து வைராக்கியம் காத்து வென்ற மகன்.  

Parisal Krishna

‏ஸ்டாலின் கும்புட்டு டக்னு அழுதுட்டார். இதாண்டா வெற்றி! நீதி மூலம் கெடைச்சது. இவனுக ஓகே சொல்லிக் கெடைக்கல. மறந்துடாதீங்க! #marina4kalaignar

திரு

‏தன் தந்தையின் கடைசி கால ஆசையை நிறைவேற்றிய மகனின் மகிழ்ச்சி...

தன் மரணத்தையும் கொண்டாட்டமாக மாற்றிய தலைவன்... எத்தனை சந்தோஷமான முகங்கள்...    

கார்க்கிபவா

‏போராட்டமே வெல்லும்... போராடிதான் வென்றான்!

அடிமை ஆட்சியின் எதிரி

‏மக்களால் தேர்ந்து எடுக்கப்படாத.... ஒரு முதல்வரிடம்.....

ஐந்து முறை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வருக்கு......

இடம் கேட்பது வேதனை.. 

நிலவன் 

‏மெரீனா கிடைத்ததும் எழுதி வையுங்கள். காலமெல்லாம் இட ஒதுக்கீட்டை போராடிப் பெற்றவன் இறந்த பின்னும் போராடிப் பெற்ற இடம் என்று.

senthilswamy #marina4kalaignar

‏மக்களுக்காக வாதாடிய தலைவருக்கு நீதிபதிகளே வாதாடுகிறார்கள்

 

Kathiravan

‏உதிக்கும்"சூரியனுக்கு" மறைவதற்கு "கடற்கரையில்" இடம் இல்லை என்று சொன்னால் இயற்கையே ஆர்ப்பரிக்கும்...

murali krishnan

‏ஜானகி ராமச்சந்திரனும் முத்துவேல் கருணாநிதியும் ஒன்றா.ஜானகி ராமசந்திரன் ஒரு மாதம் கூட முதல்வராக இல்லை.ஆனால் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 5 முறை முதல்வர் 50ஆண்டு காலம் திமுக தலைவர்.இதை கூட பிரித்துப்பார்க்க தெரியாதவன் ஒரு மாநிலத்தின் முதல்வர்

ஆரூர்.ம.எழிலன்

சட்டப்படி தீர்ப்பு அளிக்க வேண்டிய நேரம் மனசாட்சியின் படி தீர்ப்பு வழங்கப்படுகிறது

மனசாட்சியின்படி தீர்ப்பு அளிக்க வேண்டிய நேரம் சட்டப்படி வழங்கப்படுகிறது.

Devaraj Nalankilli

‏சேக்கிழாருக்கும் கம்பருக்கும்  வித்தியாசம் தெரியாதவருக்கு

எப்படி அண்ணாவிற்கும் கலைஞருக்கும் உண்டான நட்பிலக்கணம் தெரியும்...

.

Jokin Jeyapaul

‏ஒரு தலைவன் எப்படி வாழ்ந்திருக்கிறான் என்பதற்கான உதாரணம் பெரியார் , அண்ணா & கலைஞர்.

எங்கு இவர்களுக்கு வலிக்குமே அங்கே அடித்திருக்கிறார்கள்.... தான் இன்னும் கதறுகிறார்கள்.

வியன் பிரதீப்

‏யாரையோ ஒரு சிலரை திருப்தி படுத்த ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக மெரினாவில் இடம் ஒதுக்க மாநில அரசு தொடர்ந்து மறுப்பு

அஜ்மல் அரசை

‏அதிர்ஷ்டத்தில் ஆட்சி நடத்தும் எடப்பாடி செய்த மிகப்பெரிய வரலாற்று பிழை மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்காததுதான்.

ராதா நைனா

‏அரசியலின் அடையாளம் நீ...

உனக்கு இடம் ஒதுக்குவதற்கு இவ்வளவு போராட்டமா!!!!

திரு.தீன்

‏#Karunanidhideath அவர் ஒரு பூரணம்.. இன்பம், துன்பம், புகழ், பழி, வேதனை, சாதனை, வெற்றி, தோல்வி, என எல்லாவற்றையும் பார்த்தவர்.

உண்மையில் வாழ்வை முழுமையாய் வாழ்ந்த ஒரே மனிதர் அவர் மட்டுமே...

அவர் ஒரு பூரணம்... ஒரு முழுமை..

ஆல்தோட்டபூபதி

‏இறந்தும் ஜெயித்தார். தனக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பெற்றார் கலைஞர். போராடிய அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.

Marina

‏திமுக தலைவர் ஸ்டாலினின் முதல் இட ஒதுக்கீடு போராட்ட வெற்றி

மெத்த வீட்டான்

கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய கோர்ட் உத்தரவு

இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா !

 

கோவை காதர்  

தமிழகத்தின் தலைவரே தமிழ் வென்று விட்டது !  

உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் ! 

Thala abdul

‏தன்னுடைய கடைசி போராட்டத்திலும் வெற்றி கண்டார் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்

Sasi Kanth

‏போராடாமல் என்றும் இடஒதுக்கீடு கிடைத்ததில்லை...

இம்முறையும் அப்படியே...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x