Published : 01 Aug 2018 04:13 PM
Last Updated : 01 Aug 2018 04:13 PM

நெட்டிசன் நோட்ஸ்: பிக் பாஸ் 2 - எல்லை மீறிய ஐஸ்வர்யா

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில்  செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்ட எபிசோடில் ஜஸ்வர்யாவுக்கு சர்வாதிகாரி பதவி வழங்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை  தனது சக போட்டியாளர்கள் மீது இருந்த தனது வெறுப்பை தீர்க்கப் பயன்படுத்திக் கொண்டார். இதில் அவரது நடவடிக்கையும், வார்த்தைகளும் எல்லை மீறின.

இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

திரு

‏டேனியும் ஜனனியும் நெனச்சிருந்தா ஐஸுக்கிட்ட இது inhuman, personal vengeance வச்சுக்காதன்னு மெதுவா எடுத்துச் சொல்லியிருக்கலாம்... ஆனா ஜனனி பட்டும் படாம அட்வைஸ் பண்ணுச்சு... டேனி பய வாயே தொறக்கல... வெஷம்... வெஷம்...

நீலாம்பரி

‏#BiggBossTamil2 ரித்விகா..ஃபைனல்ஸ்ல ஒரு தமிழ் பொண்ணு..வந்தா நல்லா இருக்குனு சொன்னதுக்கு அவங்க இனவெறியோடு பேசுறாங்கனு..சொன்ன பிராட்மைண்ட்  பொண்னுங்க..பசங்க எல்லா ஐஸ்வரியா நிறவெறி கமெண்ட்டுக்கு மவுனமா இருங்கீங்க..இதுக்கு பெயர் என்ன தெரியுமா..

நெய்தல் வேந்தன்

‏காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.அது எல்லா நாட்டு காக்கைக்கும் பொதுவானதே....

கருப்பு எங்கள் நிறமடா!!!அது கலப்பினம் இல்லா இனமடா!!

விக்ரம் ராஜா 

‏ஐஸு பண்றது கூட பரவாயில்லை.  ஆனா வார கடைசில கமல் வந்து   "காந்தி காலத்துல எல்லாம் பேசவே முடியாதுங்க"  மூஞ்சில சின்னதா மீச வச்சிக்கிட்டு ஒருத்தர் இருந்தார்.. பேசினா சுட்டுடுவார் வரலாறு கிண்டுவார் பாருங்க... ஐஸுக்கு சப்போர்ட் பண்ணி.

 

 

 

Hasirul Basith

‏சக தமிழனை அவமானப்படுத்த எவனுக்கும் உரிமை இல்லை. அதுவும் தமிழ்நாட்டில், வியாபாரத்திற்காக ஒரு தமிழன் அசிங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர் பாலாஜி மீது குப்பை கொட்டி அசிங்கப்படுத்தியதற்கு கண்டனங்கள்.

Ashok Haasan

‏மக்களின் உணர்ச்சிகளை தூண்டி, அவர்களின் வெறுப்பையும் கோவத்தையும் காசாக்கி கொள்ளும் இந்த மாதிரி நிகழ்ச்சி உங்களுக்கு தேவை தானா?

namulhasan

‏என்ன டாஸ்க்கா இருந்தாலும் ஒரு மனுஷன் மேல குப்பையை கொட்டுறது, இனவெறி வார்த்தைகளை ரித்விகா மீது பேசியது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல, தண்டிக்கப்பட வேண்டும்.

 

handra Shekhar

‏பாலாஜி மீது சர்வாதிகாரி குப்பையை கொட்டும்போது பரிதாபப்பட்ட மக்களைப் போலத்தான் நாமும்..

எதிர்த்துக் கேட்காமல், தடுத்து நிறுத்தாமல் உச்சு கொட்டும் நமக்கு, இதுவொரு விழிப்புணர்வு பாடம்..

லொல்லு-மன்னன்

TRP எகிற ஆரம்பிச்சிடும் இந்த சம்பவத்தால...

இவ்ளோ நாள் வில்லன் யார்னே தெரியாம படம் ஓடுச்சு இப்ப ஒரு வில்லன் தானா வந்து மாட்டிட்டான்...

ஐஸ்வர்யா பரிதாபங்கள்..

NeMo

‏இந்த இந்தியாவிற்கு தன்மானம் அதிகம்!-சொன்னது நினைவிருக்கா கமல் அவர்களே? பெண்களை தரக்குறைவான வார்த்தைகள் பேசுவது, கெட்ட வார்த்தை பேசுவது, குப்பையை தலையில் கொட்டுவது.. கீழ்த்தனம்! இந்த சீசன் அபத்தத்தின் உச்சம்!

மெட்ராஸ் பையன்

‏பிக் பாஸ் : ஐஸ்வர்யா டாஸ்க்கை சிறப்பாக செய்தீர்கள்.. உங்களை அடுத்த வாரமும் நாமினேட் செய்ய முடியாது. வாழ்த்துகள். இதான் நடக்கப் போகுது.

ஆல்தோட்டபூபதி

‏பாலாஜி மனைவி வெளிய பொலம்பணும், பாலாஜி வெளிய வர மக்கள் உதவணும், அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழணும். தேங்க்யூ பிக்பாஸ்.

iddaya guna

‏சர்வாதிகாரி கூட ஓகே! அதுக்கு ஆலோசகராக ஜனனிய போட்டியே பாரு பிக்பாஸ்! அங்க தான்யா நீ நிக்கிற! சூப்பரு! #BiggBossTamil2 #BiggBossTamil

Raasu

‏எப்படியும் அடுத்த வாரத்துல இருந்து குறைஞ்சது 3 மணி நேரம் ப்ரோகிராம் போட்டாதான் இவிங்க போடுற பாதி சண்டயவாச்சும் கவர் பண்ண முடியும்னு நினைக்கிறேன்.. #BiggBossTamil2

AJ

‏நாய் - மயிறு - குரங்கு - கருப்பு தோல் !

ம்ம் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் பேசும் வார்த்தைகள்.

udaya chandar r

‏போன வருஷம் சேரி பிஹேவியர்..இந்த வருஷம் கருப்புத்தோல்..அதுக்கே கமலஹாசன் எதுவுமே சொல்லல..இந்த முறை ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா உங்களுடைய முட்டாள்தனம்

ռǟʀɛֆɦ

‏அந்தப் பொண்ணு குப்பையைக் கொட்டப் போகுதுன்னு பாலாஜிக்கு முன்னாடியே தெரியும் போல..

தெளிவாக வெள்ளை சட்டையை மாற்றி விட்டு, பச்சை நிற சட்டைக்கு மாறிவிட்டார்..

Daydreamer

‏“ராணி உங்ககிட்ட பவர் இருக்கு , நீங்க என்ன வேணா பண்ணலாம் “ -அரசு ஆலோசகர் ஜனனி

தமிழ் செல்வன்

‏சனி, ஞாயிறுல  கமல் இத கேள்வி கேப்பாருனு நினைச்சிட்டு கிடக்காதீங்கடா, அவருக்கு 10-ம் தேதி படம் ரிலீஸ், அத ப்ரோமோட் பண்ணிட்டு போயிருவாப்ல.

நைனா 

‏ஹிந்தில கெட்டவார்த்தை பேசுரா ஐஸ்வர்யா . அது தப்பில்ல, ஆனா தமிழ்ல கெட்டவார்த்தை பேசுனா மட்டும்தான் பிக் பாஸ் கவுரவம் குறைஞ்சுடும் இப்படிக்கு - கமல்

மேதகு சிவா

‏இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட வேண்டியவர்கள்

ஐஸ்வர்யா,

டேனி.

Bharati ShivN

‏கமல் சார், கலாச்சாரம் பற்றி பேசினீங்க. தமிழ்ப் பெண்கள் சுயநினைவு இல்லாமல் இருந்தாலும் ஐஸ்வர்யா பண்ணியது போல் பண்ணமாட்டார்கள். இதான்  தமிழ்க் கலாச்சாரம்.

 தமிழச்சி  ⚡

‏சர்வாதிகாரம் வீட்டில் அரங்கேறியதும், மாயமான குணங்கள், மய்யமான அமைதி, நான் சரியாக கேள்வி கேட்காவிட்டால் என்னை வெளியேறச் சொல்லும் மக்கள்,  வாருங்கள் இன்று இரவு உங்கள் பிக் பாஸில் காண்போம் - கமல் 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x