Published : 30 Jul 2018 12:37 PM
Last Updated : 30 Jul 2018 12:37 PM

நெட்டிசன் நோட்ஸ்: "எழுந்து வா தலைவா"

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதி உடல், நலம் பெற்று வேண்டும் என திமுக தொண்டர்கள் ‘எழுந்து வா தலைவா ’என்று முழுக்கமிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அவர் செய்த சாதனைகளையும், அவர் உடல் நலம் பெற்று வர வேண்டும் எனவும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

K Pongiannan

தமிழ் தவிக்கிறது...!

தமிழகமே திகைக்கிறது..!!

வா..வா...தலைவா..!

எழுந்து வா...தலைவா...!!

இல. சீனிவாசன்

‏தமிழே, உன் கையசைவை காண அழைக்கிறோம். உன்னை அழைக்கும் எமனுக்கு கையசைத்து என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் எழுந்து வர எனக்கு கட்டளையிட்டனர். அதனால்  உன்னுடன் வர இயலாது என சூளுரைத்து உங்கள் காந்த குரலை கேட்க, கையசைவை கான காத்திருக்கும் எங்களை நோக்கி மீண்டு மீண்டும் வா தலைவா.

SKP KARUNA

‏அதுதான் அவரோட மனைவி, மகன், மகள், பேரப்பிள்ளைங்க எல்லாம் வீட்டுக்குப் போயிட்டாங்களே! பிறகு எதற்கு இத்தனை ஆயிரம் பேர் இன்னமும் கலையாமல் பிடிவாதமா இருக்காங்க எனக் கேட்கிறார் ஒரு வட இந்திய அதிகாரி!

அதானே! இந்தக் காரணத்தைக் கண்டுபிடிங்க சார்! தமிழகத்தை எளிதில் புரிஞ்சுக்கலாம்.

புகழ்

‏பெரியார் = சமூகம்.

அண்ணா = சமூகம் +

                      அரசியல்

கலைஞர் = சமூகம் +

                      அரசியல் +

                      மொழி

அஜ்மல் அரசை

‏கலைஞர் என்ற  பிறப்பு போராளி இறப்பு வரை போராடிக் கொண்டிருக்கிறார்.

Janani

‏கலைஞர் பத்தி இவ்ளோநாள் தெரிஞ்சிக்கிட்டதைவிட இந்த 4 நாளில நிறைய தெரிஞ்சிக்கிட்டேன்! முதல்தலைமுறை பட்டதாரிகள் திட்டம், பெண்களுக்கு சொத்தில்பங்கு போன்ற பல திட்டங்கள் அவருதுனு எனக்கு தெரியாது! BJP புடிக்காததினால DMK வரணும்னு நெனச்சேன்! இப்ப அவர் மேலமரியாதை பன்மடங்கு உயர்ந்திருக்கு!!

Sarcastic Dude

‏அவர் கொடுத்த டிவி மாதிரியே அவரும் ரொம்ப ஸ்ட்ராங்

Arun Pandiyan

‏தமிழையும் தமிழ்நாட்டையும் இன்னும் மேம்படுத்த முடியாதா என்று ஆசை. எனக்கு நெடுநாள் உயிரோடு இருக்கவே ஆசை.

ஆக எமனால் அவ்வளவு எளிதில் என் உயிரைப் பறித்து விட முடியாது.

 ~ 20 வருஷம் முன்னாடி ஒரு நட்சத்திரக் கலை விழால கலைஞர் சொன்னது.

அரசு அதிகாரி

‏எனக்கு திமுக மேல் அரசியல் ரீதியாக வேறுபட்ட கருத்து இருந்தாலும் பிடிக்க ஒரு காரணம் இருக்கு. தமிழகத்தில் இந்தி திணிப்பை தடுத்தது உண்மையிலேயே திமுக தான் #கலைஞர்

AbdulRasheeth

அன்று சாதியை எதிர்த்து போராடினார்.

இன்று சாவை எதிர்த்து போராடுகிறார்.

வெற்றியுடன் எழுந்து வா தலைவா 

விழித்துருக்கிறேன் சூரிய உதயத்தை காண்பதற்க்கு.

Krish

‏பல குடும்பங்களில் ஆண்கள் பலர் கலைஞரை கரித்துக் கொட்டுவார்கள். எங்கள் குடும்பத்திலும்தான். காரணம் தகப்பனின் சொத்து பிள்ளைக்கு மட்டுமே சொந்தம் என்பதை மாற்றி, சொத்தில் பெண்களுக்கு சம உரிமையை கொடுக்கவேண்டும் என்ற சட்டத்தை இயற்றியதற்காக..

Ragur Laxmana Munirathinam

‏தலைவா உன் குரல் கேட்கும்வரை உன் தொண்டர்களுக்கு .உறக்கம் இனி இல்லை.என் உயிரினும் மேலான உடன் பிறப்பே என்று என் போன்ற அடி மட்டத்தில் தொண்டர்களை அன்புடன் அழைக்கும் தலைவா....வா...எழுந்து வா...தலைவா...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x