Published : 18 Jul 2018 05:02 PM
Last Updated : 18 Jul 2018 05:02 PM

எதற்கு  நடுவரிடமிருந்து பந்தை வாங்கினார் தோனி?- நெட்டிசன்கள்  குழப்பம்

இங்கிலாந்துடனான மூன்றாவது ஆட்டத்தின் முடிவில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி நடுவரிடமிருந்து பந்தை வாங்குகிறார். இந்த வீடியோவைக் கண்ட சிலர் தோனி ஓய்வை அறிவிக்கப் போவதாக அச்சம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒரு நாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இங்கிலாந்து அணி.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனி சிறப்பாக ஆடவில்லை என்று அவர் ஓய்வுபெற வேண்டும் தோனி வெறுப்பாளர்கள் ஒருபக்கம் குரல் கொடுத்துவரும்வேளையில்,  தோனி தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.

இங்கிலாந்துடனான மூன்றாவது போட்டியின் ஆட்டத்தின் முடிவில் நடுவர்களிடமிருந்து பந்தை தோனி வேகமாகப் பெற்றுச் செல்லும் வீடியோதான் அது.

கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவர்கள் தங்கள் கடைசி ஆட்டங்களின்போது அந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பந்தையோ, ஸ்டெம்பையோ  பெற்றுக் கொள்வார்கள். அதன்படி ஓய்வுக்கான முடிவை தோனி அறிவிப்பதற்காக பந்தை வாங்கிக் கொண்டாரா? என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் குழப்பங்களூடன், வருத்தங்களுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது தொடர்பான சிலரின் பதிவுகள்:

Nucky

‏யார் வந்தாலும் போனாலும் கிரிக்கெட் தனக்கான தலைவனை உருவாக்கிக் கொள்ளும். இதில் தோனி மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு..!!

Tamil Sundar R

‏தோனி என்ன சச்சினா..... தோனி சச்சின்லா இல்ல ஆணா.... தோனி தோனிதான்....

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்...

Baladoss

‏தோனி பர்ஸ்ட் மேட்ச் பேட்டிங்கே பண்ணலை... Fitness இல்ல. ரிட்டையர் ஆகணும்.

2வது மேட்ச்ல... 10000 ரன்னே இப்பதான் அடிச்சாரு.. ரிட்டையர் ஆகணும்.

3வது மேட்ச்ல 42 ரன்தான் அடிச்சாரு... ரிட்டையர் ஆகணும்.

இந்தியா 2 மேட்ச்ல டாஸ் தோத்தாங்க.. தோனி கன்டிப்பா ரிட்டையர் ஆகணும்.

மீனம்மா

‏தோனி ஓய்வு பெற்றால்.. கிரிக்கெட் தன் அழிவுக்காலத்தை தொடங்கும் :(

Mahi AK

‏தோனி கேப்டனா இருந்திருந்தால் தோத்ததுக்கு அவன கைகாட்டி விட்ருப்பாய்ங்க. இப்ப பேட்ஸ்மேன், பவுலர், பால்பாய் முதற்கொண்டு எல்லாரையும் குறை சொல்லிட்டு இருக்கானுங்க

Baladoss

‏ஏன்டா.. கோலி சாதனை பண்ணா தோனி ஏன் ரிட்டையர் ஆகணும்...

தோனியின் ஓய்வு குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x