Last Updated : 17 Jul, 2018 02:39 PM

 

Published : 17 Jul 2018 02:39 PM
Last Updated : 17 Jul 2018 02:39 PM

சின்ன சின்ன வரலாறு 14 : பல்பு  வாங்கிய கதை அல்ல! பல்பின் கதை!

பல்பைக் கண்டுபிடித்தது யார் என்று கேட்டால், நீங்கள் தாமஸ் ஆல்வா எடிசன் என்று சொல்லி பல்பு வாங்குவீர்கள். ஆமாம்... ஆனால் அது தவறு என்கிறார் கம்ப்யூட்டர்ஜி.

1879ம் ஆண்டு எடிசன் லைட் பல்ப் கண்டுபிடித்து பேடண்ட் செய்தார். ஆனால் இதற்கு முன் இருபது கண்டுபிடிப்புக்கள் இருந்திருக்கின்றன.

இந்த பல்புகளின் முதல் கண்டுபிடிப்பு ஹம்ப்ரி டேவி என்பவரால் 1802ம் ஆண்டில் நடந்தது. இது ஒரு எதிர்பாராத கண்டுபிடிப்பு.

அவர் தான் கண்டுபிடித்த மிகவும் சக்தி வாய்ந்த பாட்டரியை சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவேளையில், அகஸ்மாத்தாய் ஒரு கார்பன் துண்டை  பாட்டரிமேல் போட.... இதுதான் பளிச் பல்ப் உருவான கதை.

இதற்கு எலக்ட்ரிக் ஆர்க் லாம்ப் என்று பெயர் சூட்டப்பட்டு, மிகவும் பளிச்சென்று கண்களைக் கூச வைத்ததால் உபயோகமற்றுப் போயிற்று.

இதற்குப்பின் நிறையக் கண்டுபிடிப்புக்கள். ஆனால் இவை ஏதும்  உபயோகப்படும் வகையில் இல்லை.

1840களில் வாரன்டி லா ருயி எனும் பிரிட்டிஷ் சோதனையாளர் நாம்  தற்போது உபயோகிக்கும் வேக்கம் பல்புகளின் முன்னோடியாக ப்ளாட்டினம் காயில்கள் கொண்டு செய்து அசத்தினார்.

ஆனால் இதுவும் நிலைக்காமல் போனது. காரணம் ப்ளாட்டினத்தின் அதி பயங்கர விலையால் பல்புகளின் விலையும் ஏறக்குறையச் சூரியனுக்கு மிக அருகில் வந்ததால், பல்பு உற்பத்தி பல்பு வாங்கியது. ஆர்வம் மிகுந்தோ அல்லது ஆசை மிகுந்தோ மனைவி அல்லது காதலிக்கு ப்ளாட்டினம் பாண்ட் வாங்கி கையை சுட்டுக்கொண்டவர்களுக்கு இதன் விலை நன்றாகவே புரியும்.

ஆனால் 1860களில் ஜோஸப் வில்சன் ஸ்வான் என்பவர் இந்த ப்ளாடினத்தைக் கடாசி விட்டு அதற்குப் பதில் கார்பன் பேப்பர்களை

ஃபிலமெண்ட்டாக உபயோகித்து வேக்கம் அதாவது வெற்றிடமாக உள்ள பல்புகளில் எரியச் செய்து முதல் பல்பர் ஆனார். தி ஸ்வான் எலெக்ட்ரிக் லைட் கம்பெனி லிமிடட் தான் உலகிலேயே முதலில் ஆரம்பிக்கப்பட்ட பல்ப் உற்பத்தி நிலையம். லண்டனின் அதி நவீன தியேட்டரான   ”தி சவாயின் தான் பல்புகளை எரியவிட்ட கம்பெனி.

இதற்கு அடுத்த தயாரிப்பு 1874களில் ஹென்றி உட்வார்ட் மற்றும்

மாத்யூ ஈவான்ஸ் என்ற இருவரால் நைட்ரஜன் நிரப்பப்பட்ட  குடுவைகளில் கார்பன் கம்பிகள் மற்றும் மின் கம்பிகள் பொருத்திச் செய்யப்பட்ட பல்புகள் மிகவும் பிரசித்திபெற்றன. ஆனால் இவர்கள் இதை நிறுவனம் செய்ய இயலாது அமெரிக்காவில் செய்யப்பட்ட பேடண்ட் உரிமைகளை தாமஸ் ஆல்வா எடிசனிடம் விற்று விட்டனர். இவ்வளவு நடந்த பின் தான் எடிசன் கதைக்குள் வருகிறார். ஆனால் இவரின்அதிர்ஷ்டம் , இவர்தான் சாதனையாளராக பேசப்படுகிறார்.

ஆனால் இவரை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இவர் தன் கண்டுபிடிப்பின் மூலம் இதுநாள் வரையில் பல்ப் உற்பத்தி விலையை

அதள பாதாளத்திற்கு கொண்டுவந்து, அதன் ஆயுள் நீடிப்பையும் செய்து எல்லோரும் உபயோகிக்கத் தகுந்ததாக மாற்றினார்.

ஆனால் இந்த வகை ஒளிரும் விளக்குகளிலிருந்து நமக்கு ஒரு 10% வரைதான் மின்சக்தி ஒளியாக மாற்றப்படுகிறது. மற்ற 90% இந்த பல்புகளின்  ஃபிலமெண்ட்டை சூடேற்ற உபயோகப்படுகிறது. அதனால் விலை

குறைவாக இருந்தாலும் மின்சக்தி ஆற்றல் நாம் உணராமலேயே வீணாகிறது.

இந்தக்காரணங்களே இந்தத்தொழிலில் முன்னேற்றம் பார்க்கக் காரணம். ஃப்ளோரசெண்ட், ஹாலோஜென், க்வார்ட்ஸ், உலோக ஹைலைட் கடைசியாக தற்போது உள்ள Led இப்படி நிறையப் புதுமைகளை சந்தித்திருக்கிறது இந்தத் தொழில். அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த மின்சக்தி வீணடிக்கப்படும் காரணத்தால் இந்த வகை இன்காண்டசெண்ட் பல்புகளை தடை செய்திருக்கிறது.

இந்த வகை பல்புகளை பின் தள்ளி தற்போது Led வகை லைட்கள் வந்துவிட்டன. இந்த Ledயும் ஒரு தற்செயல் கண்டுபிடிப்புதான்! நிக் ஹோலோனக் என்பவர் 1960களில் லேசர் ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்த லைட் எமிடிங் டியோட்சைக் கண்டுபிடித்தார். இதன் தொடர்ச்சியாக மஞ்சள் மற்றும் பச்சை வண்ண Ledக்களும் கண்டு பிடிக்கப்பட்டு, இப்போது நீலவண்ணமும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இப்போது ஸ்டாக் ஸ்மார்ட் பல்புகளும் வரத்தொடங்கி விட்டன. நம்  வீட்டில் உள்ள மிகப்பெரிய குறை என்ன..... விளக்கைப்போடுவோம் ஆனால் ரூமை விட்டு வந்தபின்னும் அது எரிந்து கொண்டே இருக்கும். இதற்கு நிவர்த்திதான் இந்த ஸ்மார்ட் பல்புகள். உள்ளே வெளியே நடமாட்டத்தை வைத்துத் தானாகவே எரியும்; அணையும். ரூமில் உள்ள வெளிச்சத்திற்கு ஏற்றபடி தன் வெளிச்சத்தைக் குறைக்கவோ அதிகப்படுத்தவோ செய்யும். நம் மொபைல் கைப்பேசிவழியே இந்த வகை கட்டுப்பாட்டுக்களை செய்ய இயலும். AI எனப்படும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் வழி இது சாத்தியமாகிறது!

இந்த வகை பல்புகள் LED பல்புகளை விட நிறைய ஆயுட்காலம் கொண்டவை என்றும் குறைவான மின்னாற்றல் போதுமானது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் காதோடு ஒரு ரகசியம். எம் ஐ டி ஜர்னல் வெளியிட்ட தகவலின் படி நாம் முதல் முதல் உபயோகித்த எடிசன் பல்புகள்தான் எதிர்காலத்தில் திரும்பவும் உபயோகிக்கப்படுமாம். நானோ டெக்னாலஜியின் உபகரணத்தால் ஆற்றல்கழிவு சுத்திகரிக்கப்பட்டு, தற்போதுள்ள Led பல்புகளை விட இன்னும் திறன் அதிகம் உள்ளதாக இவை மாற்றப்படுமாம்.

என்னவோ போ...ஓல்ட் இஸ் கோல்ட் என்று சும்மாவா சொன்னார்கள்! 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x