Last Updated : 04 May, 2018 08:05 PM

 

Published : 04 May 2018 08:05 PM
Last Updated : 04 May 2018 08:05 PM

நெட்டிசன் நோட்ஸ்: ‏நாடு கடத்தப்பட வேண்டிய நீட் நாடு கடத்திக்கொண்டிருக்கிறது

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 6) நடைபெற இருக்கிறது. தமிழக மாணவர்கள் தேர்வு எழுத கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கு இன்னலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

உளவாளி

‏மத்தியிலோ மாநிலத்திலோ ஆட்சி மாற்றம் நிகழாமல் எவ்வளவு போராட்டம் நடத்துனாலும் நம் பிரச்சினைகள் தீர வாய்ப்பில்லை..இது சுரணையற்ற அரசு..

பெரியார்தேசம்

‏“ராஜஸ்தான் இந்தியாலதான இருக்கு? போய் எக்ஸாம் எழுதிட்டு வரவேண்டியதுதானே?”ன்னு அமெரிக்காவுலே உட்கார்ந்துக்கிட்டு கேட்குறானுங்க.

காக்கா முட்டை! !

கேரளா,ஆந்திர கூட சுற்றி பார்க்க ஆசைப்பட்டு  மாணவர்களே வேண்டி விரும்பி கேட்டதாலதான் போட்டிருப்பாங்க.. அப்படி தானே சார் ?

Rajapandiyan Raja

‏#NEET தேர்வு வேண்டாம்னு போராடின நம்மள இப்போ அதை தமிழ்நாட்டுல வைன்னு போராட வெச்சாங்க பார்...அங்க தான் அவங்க screenplay சாமர்த்தியம்

Sivarupan G

‏மத்தியிலும் மாநிலத்திலும் இந்த ஆட்சி துடைத்தெறியப் படாதவரை தமிழ்நாட்டில் நிம்மதி என்பதே இல்லை.

MARI

‏தமிழ்நாட்டில் நீட் தேர்வு மையமே அமைக்க முடியவில்லையாம்.. அப்போ எய்ம்ஸ் மட்டும் எப்படி வரும்? #Neet

Gopinath.D

‏நீட் தேர்வை தடுக்க தான் உங்கள் அரசால் முடியவில்லை. அந்தத் தேர்வை தமிழ் நாட்டில் நடத்தக் கூட முடியவில்லை என்றால் உங்களின் அரசு தமிழ்நாட்டில் எதற்கு?

karthi

‏தமிழ்நாட்டில் மீத்தேன் எடுக்க இடமுண்டு. ஹைட்ரோ கார்பன் எடுக்க இடமுண்டு.நியூட்ரினோவுக்கும் இடமுண்டு. ஆனா, பாருங்க நீட் எக்ஸாம் எழுத மட்டும் இடமில்லை. இதுதான் டிஜிட்டல் இந்தியா.

Piriyan Lyricist

‏வழக்கம்போல்

வேடிக்கை பாருங்கள்

பொறுப்பாளர்களே..

வரிப்பணம் கட்டிவிட்டு

நாங்கள் ஊர் ஊராய்

அலைகிறோம்..

Pandaravadai Pdv

‏அடேய்....தமிழ்நாடு எங்க இருக்கு ராஜஸ்தான் எங்க இருக்கு..

முரளிதீர தொண்டைமான்

‏என்ன ஒரு குள்ளநரி தந்திரம்.. "நீட்" வேண்டாம் என்ற தமிழக மக்களை இங்கேயே நடத்துங்கள் என கேட்க வைத்த மத்திய அரசு!

vinosh

ஒரு மாநிலம் எவ்வளவுதான் போராட்டங்களை நடத்தும் எல்லாவற்றிக்கும் வஞ்சனை செய்யும் மத்திய அரசே!

ஆல்தோட்டபூபதி

‏ஆந்திரா தெலுங்கானான்னானுங்க, இப்ப ராஜஸ்தானா? ராஜஸ்தானெல்லாம் திருடனப் புடிக்க போற ஏரியாடா, எக்ஸாம் எழுத போகச் சொல்றானுங்க. ஆனாலும் காவிரி / ஸ்டெர்லைட் / மீத்தேன் / நீட் / அதிகரிக்கும் கொலை கொள்ளைன்னு  ஓராயிரம் நோயை உடம்புக்குள்ள வச்சுக்கிட்டு இந்த 'பாடி' எப்படித்தான் நடமாடுதோ?

பழனிவேல்தேவன்

‏நாடு கடத்தப்பட வேண்டிய நீட்

நாடு கடத்திக்கொண்டிருக்கிறது

சத்துகுட்டி  

‏#NEET exam ஐ தடை செய்ய சொன்னா,

தமிழகத்தில்

எழுதுவதற்கு தடை செஞ்சுருக்கானுங்க...

BharatH  

‏நம்ம ஆளுங்க #IPL பாக்கணும்னா வெளிமாநிலத்திற்குப் போகணும்

#NEET எழுதுனாலும் வெளிமாநிலத்திற்குப் போகணும்

..எங்கபோய்முடியப்போகுதோ?

சதீஷ் துளசிங்கம்

‏ஒரு அரசு செய்ய வேண்டிய முக்கியக் கடமைகளில் ஒன்று, தன் மக்களுக்கு கல்வியை எளிதில் கிடைக்கச் செய்வதே..

ஆனால் நீங்கள் @CMOTamilNadu @OfficeOfOPS என்ன செய்கிறீர்கள்?

Karthick Thangavel

‏எதை நோக்கி நாம் பயணப்பட நிர்பந்திக்கப்படுகிறோம் என்று தெரியவில்லை....இதுவரை நடந்தது எல்லாம் ஒதுக்கிவைக்க முடியாது. ஆனால், தற்போது 5500 மாணவர்களின் கனவு சிதைக்கப்படுகிறது. நம்மில் யாரும் மருத்துவர் ஆகக் கூடாது என முடிவெடுத்து அதை நோக்கி நம்மைத் தள்ளுகினறனர். #NEET

கார்த்திக் ராஜா

‏இந்த வருடம் நீட்டைப் பழகிட்டோம், அடுத்த வருடம் ராஜஸ்தான் பழகிடுவோம்..

கை #நீட் டியதால்

இட்லி

‏நீட்டுக்கு மக்கள் உதவிக்கரம் ‘நீட்டு’கின்றனர்! - செங்காந்தள்

Ariya Ari

‏"நீட் " தேர்வு வேண்டாம் என்று சொல்வதற்கே நாம் ஒன்றுபட நேரம் எடுத்துக்கொள்வதற்குள்..அதை எப்படி செயல்படுத்துவது என்பதற்கு அடுத்த சூழ்ச்சி வகுத்து  தேர்வு மையம் கிடையாது என்று உச்ச நீதிமன்றத்தை சொல்ல வைக்க முடிகிறது என்றால் அதுதான் ஒற்றுமை ;முன்னது திராவிடம்;பின்னது ஆரியம்..

பவினா    அதீஸ்

‏நீங்க ஓட்டுக்கு 2000 ரூபாயும் கோழி கறியும் குவாட்டரும் வாங்காம இருந்தா இந்த மாதிரி பரீட்சைக்கும் 1000 ரூபா வாங்குற அசிங்கமான நிலமை வந்திருக்காதுல்ல  மக்களே..

rmn

தமிழ்நாடு பூஜ்யத்தை நோக்கி வேகமாக முன்னேறுகிறது. தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. வீணாகிப்போன அரசியல்வாதிகள் இந்த வருடம் சிக்கிம், ராஜஸ்தான், அடுத்த வருடம் காபூல் மற்றும் இஸ்லாமாபாத் நமது அரசியல்வாதிகளுக்கு தேவை பணம் விளம்பரம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x