Last Updated : 09 Apr, 2018 04:02 PM

 

Published : 09 Apr 2018 04:02 PM
Last Updated : 09 Apr 2018 04:02 PM

துபாய்க்கு செல்லும் கம்பம் வாழை இலைகள்: தமிழ்ப் புத்தாண்டு, விஷூ பண்டிகைகளுக்காக பெரிய அளவில் ஏற்றுமதி

துபாயில் தமிழ்ப் புத்தாண்டு, விஷூ பண்டிகைகளைக் கொண்டாடும் தமிழர்கள் மற்றும் மலையாளிகளுக்காக கம்பத்திலிருந்து வாழை இலைகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

வாழை இலையில் சாப்பிடுவது தமிழர்களின் பாரம்பரிய ஒரு கலாச்சாரம். இதை வெளிநாட்டுக்குப் போன பின்னும் பழைய நினைவுகளை மறக்காமல் கடைப்பிடிக்கின்றனர் தமிழர்களும் மலையாளிகளும்.

அதிலும் துபாயில் உள்ள இவர்களின் உணர்வுகள் பழைமையின் சுவை குன்றாமல் பண்டிகைகள் கொண்டாட விரும்புவதைக் காண முடிகிறது.

மேற்கு ஆசியாவில் வசிக்கும் தென்னிந்தியர் வீடுகளில் பண்டிகை கொண்டாடுவது என்றால் சொந்த ஊரில், வீட்டில் இருப்பதுபோன்ற  உணர்வே ஏற்படும்.அதற்குக் காரணம கம்பம் பள்ளத்தாக்கில் இருந்து நேராக வந்துசேரும் வாழை இலைகள்தான்.

வாழை இலைகளின் தேவையினால் துபாயில் ஏப்ரல் மாதம் மட்டும் பண்டிகை காலங்களில் அவற்றின் விலை உயரும். கேரளாவைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் மொத்தமாக வாங்கும்பொருட்டு கம்பம் பள்ளத்தாக்கில் கூடுகின்றனர்.

முதிர்ந்த வாழை இலைகள்

''நாங்கள், முதிர்ந்த, நாட்டு வாழை இலைகளை மட்டும் சேகரிக்கிறோம்'' என்றார் இலை ஏற்றுமதியாளர் சுக்காங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வி.சுதாகரன்,

இதுகுறித்து அவர் விவரமாக தெரிவித்தாவது:

''இலைகளில் கருப்புப் புள்ளிகளோ அல்லது மஞ்சள் புள்ளிகளோ இருக்கக் கூடாது. அடர்ந்த பச்சையாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள், பண்ணைகளிலேயே இலைகளை தர வாரியாகப் பிரித்து அட்டைப்பெட்டிகளில் பார்சல் செய்துவிடுகிறார்கள். பின்னர் அதனை கொச்சி விமான நிலையத்திற்கு ஏற்றுமதிக்காக அனுப்பி வைக்கிறார்கள். இந்த இலைகள் துபாய் சந்தைகளில் 24 மணிநேரத்திற்குள் சென்றடைகிறது.

கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து....

சின்னமனூர் மற்றும் அதன் அருகிலுள்ள விவசாயப் பண்ணைகளிலிருந்து வரும் வாழைப்பழங்களுக்கு மேற்கு ஆசிய நாடுகளில் ஏற்கெனவே நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல தற்போது கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து வரும் வாழை இலைகளுக்கும் அங்கே, முக்கியமாக துபாயில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த முதிர்ந்த வாழை இலைகளை நாங்கள் ஏற்றுமதி செய்வதால் நம்ஊர் சந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பிருக்காது. மேலும் உள்ளூர் மக்கள் எந்த வகையான வாழை ரகம் என்றாலும் இளம்பச்சை இலைகளையே விரும்புகின்றனர். அதனால் விரைவில் வாடாமல் எப்போதும் புதியதாகவே இருக்கும் என்பதற்காக நாங்கள் ஏற்றுமதிக்காக அடர் பச்சை வாழை இலைகளையே பெற்று அனுப்புகிறோம். வார இறுதி வரை தினம் தினம், ஒரு டன் வாழை இலைகளை நாங்கள் அனுப்பிவைக்கிறோம்''

கிறிஸ்துமஸ்ஸுக்குக் கூட

''எனினும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் துபாய்க்கான வாழை இலையின் உச்சபட்சத்தில் இருக்கும். கிறிஸ்துமஸ் காலத்தில் வாழை இலை ஏற்றுமதியின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு மட்டும் குறைந்த அளவில் அனுப்பிவைத்தோம்.

ஆனால் இந்த ஆண்டு விஷூ ஆண்டுப் பிறப்பிற்கும் தமிழ்ப் புத்தாண்டுக்கும் மிகப்பெரிய அளவுக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. பெரிய குளம் வட்டாரத்தில் கொல்லப்புரத்திலிருந்து, லோயர் கேம்ப் அருகே கூடலூர் வரை ரூ.2க்கு வாழை இலைகளைக் கொள்முதல் செய்கிறோம்'' என்கிறார் சுதாகரன்.

காற்றிலிருந்து காக்க

பலமான காற்றிலிருந்து வாழை இலைகள் சேதமடையாமல் இருக்க தொடர்ந்து தரத்தைப் பராமரிப்பதற்காக வேண்டி, வாழைத்தோட்டத்தைச் சுற்றிலும் அடர்ந்த தாவரங்களை வளர்க்கலாம் என, விவசாயிகளுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

''வாழை மரங்கள் சேதமடையாமல் இருக்க அதற்கு ஆதரவாக சுற்றிலும் சவுக்குக் கழிகளை முட்டுக்கொடுக்கிறோம். இதனால் வாழை இலைகள் சேதமடையாமல் தடுக்கப்படுகின்றன'' என்கிறார் கொல்லப்புரத்தைச் சேர்ந்த விவசாயி எஸ்.கருப்பன்.

கணிக்கொன்றை மலர்கள்

விஷூ பண்டிகையின்போது விஷூக்கனி பூஜை அறை ஏற்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் கணிக்கொன்றை (காசியா பிஸ்டுலா) மலர்களும் அனுப்பிவைக்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் உள்ள ஹோட்டல்களில் பெரும்பாலான குடும்பங்களுக்கு சதய விருந்து அளிக்கப்படும் நிகழ்வுகளில் இந்த மலர் அலங்காரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x