Last Updated : 07 Apr, 2018 05:34 PM

 

Published : 07 Apr 2018 05:34 PM
Last Updated : 07 Apr 2018 05:34 PM

ஆம் சல்மான் கான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்: கைதும் ஜாமீனும், இந்திய மனநிலையும்

மான் வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை  பெற்ற பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இரண்டு நாட்களில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1998 செப்டம்பர், அக்டோபரில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே ‘ஹம் சாத் சாத் ஹைன்’ படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சல்மான் அரிய வகையைச் சேர்ந்த 2 மான்களை வேட்டையாடி கொன்றதாக உள்ளூர் கிராம மக்கள் புகார் அளித்தனர்.

ஜோத்பூர் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் வியாழக்கிழமை நடிகர் சல்மான் கான் குற்றவாளி என்று கூறி அவருக்கும், 5 ஆண்டுகள் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது. நடிகர் சயீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஜோத்பூர் சிறையில் சல்மான் கான்  அடைக்கப்பட்டார். ஜோத்பூர் சிறை சாலையின் வெளியே அவரது ரசிகர்கள் சல்மானை விடுதலை செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் நிகழும் முக்கிய பிரச்சனைகளை தவிர்த்து சல்மானின் தண்டனையை பிராதான செய்தியாக இந்தியாவின் தேசிய ஊடகங்கள் வெளியிட்டன. 

சல்மான் தனது முதல்  நாளை ஜெயலில் எப்படி கழித்தார். உறங்கினாரா என்று தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்க, சமூக வலைதளங்களில் சல்மானின் ரசிகர்கள் இன்னும் பல அபத்தமான செயல்களை அரங்கேற்றினர்.

சல்மானுக்கு ஆதரவாக பதிவிடாத பாலிவுட் நடிகர்களின் மீது வசை சொற்களை கொட்டினர். இதன் மூலம் தொடர்ந்து 60 மணி நேரந்துக்கு மேலாக ட்விட்டரில் இந்திய அளவில் சல்மான் கான்  டிரெண்ட் ஆகிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் சிறுமி ஒருவர் சல்மான்கானை விடுதலை செய்யக் கோரி அழும் வீடியோ ஒன்று வலம் வந்து கொண்டிருந்தது. சல்மானை விடுதலை செய்யவில்லை என்றால் நான் உணவு உண்ண மாட்டேன். பள்ளிக் கூடத்துக்கு போக மாட்டேன் என்று அந்தச் சிறுமி போராட்டத்தில் குதித்தார். இதில் கூடுதலாக நம்மை வருந்த வைக்கும் செய்தி வெறும் ஐந்து வயதுக்குள்ளிருக்கும் அச்சிறுமியின் போராட்டத்துக்கு அவரது பெற்றோர்கள் துணையாக இருந்தனர்.

அந்த சிறுமியின் உடல் மொழிகளை நன்கு கவனித்தால் அவரது பெற்றோர்கள்தான் அவரின் போராட்டத்தின் பின்னணியில் இருக்கிறார்கள் என்று நம்மால் ஊகிக்க முடியும்.

இதனைத் தொடர்கள்  சிறுவர், சிறுமிகள் பலர் அழுது கொண்டும், சோகமான உணர்வுடனும் சல்மான் கானுக்கு ஆதரவாக பேசுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வரிசையாக வெளியிடப்பட்டன. அவரது ரசிகர்களின் ஆதரவுகளுடன் அவை பரவலாக வைரலானது.

சல்மானை விடுதலை செய்யாவிட்டால் எங்கள் உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று சமூக வலைதளங்களில் மிரட்டலும் விடுத்தனர்.

குழந்தைகள் மீது எத்தகைய வன்முறையைச் செலுத்துகிறோம் என்று அறியாமல் ஊடக வெளிச்சத்துக்காக அவர்களை பயன்படுத்திக் கொண்ட பெற்றோர்கள் சல்மான் செய்த குற்றத்தை கூறியிருப்பார்களா?  நீதிமன்றதால் குற்றவாளி என்று தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் புகைப்படத்தை தங்கள் குழந்தைகளின் கையில் கொடுத்து வீதியில் போராட இறக்கிவிட்டிருக்கும் இவர்கள் எந்த அறத்தை அவர்களுக்கு கற்பிக்க போகிறார்கள்?  இல்லவே இல்லை... அவர்களுக்கு வேண்டியது கிடைத்துவிட்டதே. ஆம் சல்மான் கான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

நாம் விரும்பும் திரை நட்சத்திரங்களை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் இந்தியர்களின் மனநோய் இன்னும் அகலவில்லை என்று சல்மான் கானின்  ரசிகர்கள் மீண்டும் நிருபித்திருக்கிறார்கள்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x