Published : 13 Oct 2017 09:09 AM
Last Updated : 13 Oct 2017 09:09 AM

பாதிக்கப்பட்டோர் குரல்!- 5: பாரூக், மீனவர்

பாதிப்பு மட்டும் எங்களுக்கா?

பாரூக், மீனவர், பாம்பன் (ராமேஸ்வரம் தீவு)

நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டெல்லாம் செல்லாதுன்னு அறிவிச்சப்ப நடுக்கடல்ல மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தோம். கரை திரும்பின பின்னாடித்தான் விஷயமே தெரியும். பிடிச்சிட்டு வந்த மீன்கள வாங்க ஒரு ஈக்காக்கா இல்லை. மறுநாள் கடலுக்குப் போகணும்னா டீசல் போடுறதுக்கும் கையில காசு இல்லை. ஒரு வருஷம் ஆகியும் இன்னும் பழைய நிலமை திரும்பல. இதுல ஜி.எஸ்.டி. வேற. படகு கட்டுறதுக்கான தளவாடச் சாமான், வலை, மோட்டார்னு எல்லாம் ஏகத்திற்கு விலையேறிப் போச்சு. அரசு நல்ல திட்டம் போட்டா, வருஷக்கணக்கா ஆனாலும் எங்கள வந்து சேர மாட்டேங்குது. தப்பா ஏதாவது பண்ணுனா, பாதிப்பு மட்டும் அடுத்த நிமிஷமே வந்திடுதே எப்படிங்க?

படம்: ராமேஸ்வரம் ராஃபி

வாழ்க்கையே சிதைந்துவிட்டது!

சோலை சீனிவாசகன், பிரட் விநியோகிப்பாளர், மும்பை

பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, தொழில் பயங்கரமாக அடி வாங்கியது. நிலைமை சரியாகிவிடும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தோம். ஆனால், ஓராண்டாகியும் வியாபாரம் ரொம்ப மந்தமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு என்னுடைய தொழில் வாழ்க்கையில் மிக மோசமான ஆண்டு. கேட்கும் முன்பே சீட்டுப்பணம் கொடுத்துவந்த நான், இந்தாண்டு 10-ம் தேதி வரை கெடு வாங்கிதான் கட்ட முடிந்தது. மகளின் பள்ளிக்கட்டணத்தைக் கூட சரியான தேதிக்குள் செலுத்த முடியவில்லை. என்னிடம் வேலை பார்ப்பவர்களின் நிலைமை அதைவிட மோசம். ஒவ்வொரு வியாபாரிக்கும் தீபாவளி வியாபாரம்தான் உச்சம். இந்தாண்டு பண மதிப்பு நீக்கத்தோடு, ஜிஎஸ்டியும் சேர்ந்து எல்லா வியாபாரிகளையும் வதைத்துவிட்டது!

கே.கே.மகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x