Last Updated : 30 Dec, 2016 10:48 AM

 

Published : 30 Dec 2016 10:48 AM
Last Updated : 30 Dec 2016 10:48 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 21: அமெரிக்கர்கள் மெட்றாஸுக்கு வருவது ஏன்?

அமெரிக்கர்கள் அடிக்கடி மெட் றாஸுக்கு வருகின்றனர். தொழில் தொடங்க, வியாபாரத்தில் முத லீடு செய்ய மட்டுமல்ல; கலைகளைத் தெரிந்துகொள்ளவும் தென்னிந்தியக் கலாச்சாரத்தை நேரில் கண்டு பாடம் படிக்கவும்கூட வருகின்றனர். ஆண்டு தோறும் வந்து சென்னை மாநகரின் ஏதாவது ஒரு குடிசைப் பகுதியைத் தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்தி, சுவர் களுக்கு வெள்ளை அடித்து, உள்ளூர் மக்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கும் ‘கடலில் கல்லூரிப் பாடம்’ என்ற கப்பல் மாணவர்களை நான் குறிப் பிடவில்லை. அவர்கள் ஒரு 4 அல்லது 5 நாட்கள் மெட்றாஸில் தங்கிவிட்டு கப்பலில் நாடு திரும்பிவிடுவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக் காவில் உள்ள சில பல்கலைக்கழகங் களும் கல்லூரிகளும் மாணவர்களை ஒரு செமஸ்டர் பருவம் முழுக்க மெட் றாஸில் தங்கிப் படிக்குமாறு அனுப்பி வைக்கிறார்கள். அப்படி 1999 டிசம்பர் சமயத்தில் வந்தவர்கள் நியூயார்க் நகரில் உள்ள கோல்கேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள். மிகவும் செல்வச் செழிப்பு மிக்க இந்தக் கல்லூரி ஆண்டு தோறும் வெவ்வேறு கலைப் பாடப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை அனுப்பி வைக்கிறது.

இந்தியாவின் அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவில் வரலாறு, கலாச்சாரம் பற்றி நேரடியாகப் பயின்று அதைத் தேர்வில் எழுதி மதிப்பெண்களும் பெற முடியும். இந்த மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் வந்தவர் டாக்டர் பில் ஸ்கெல்டன். 4 மாதங்கள் இங்கு தங்கிய பிறகு நிறையக் கற்றுக்கொண்ட மன நிறைவோடு அமெரிக்கா திரும்பு கின்றனர். கர்நாடக சங்கீதம், தெருக் கூத்து, மகாபலிபுரம் என்று அவர்கள் படிக்க வேண்டிய பாடம் 2 ஆண்டு களுக்கொரு முறை மாறிக்கொண்டே இருக்கிறது. ஸ்கெல்டனுடன் வந்தவர் கள் மைசூரு சென்று முன்னாள் மகா ராஜா ஜெயச்சாமராஜ உடையாரின் இப்போதைய வாரிசையும் அரண்மனை யையும் பார்த்துவிட்டு, அவருடைய முக்கியத்துவத்தை அறிந்து வந்தனர்.

ஆண்டுதோறும் கர்னாடக இசைக் கலைஞர்கள் சிலரை கோல்கேட் பல்கலைக்கழகத்துக்கே வரவழைத்து கர்னாடக இசையை அங்குள்ள பிற மாணவர்களும் ஆசிரியர்களும் கேட்க ஏற்பாடு செய்கிறார் ஸ்கெல்டன். அவரே கர்னாடக இசையில் நல்ல தேர்ச்சி உள்ளவர். கோல்கேட் பல்கலைக் கழகத்துக்கு வந்த முன்னணி இசைக் கலைஞர்களின் பட்டியலை அவர் கூறும்போது பிரமிப்புதான் ஏற்படுகிறது.

ட்ரூ பல்கலைக்கழகம், மாடிசன், நியூஜெர்சி, புனித ஓலாஃப் கல்லூரி, நார்த்ஃபீல்ட், மின்னசோட்டா, டேவிட்சன் கல்லூரி, டேவிட்சன், வடக்கு கரோலினா போன்ற பல்கலைக் கழகங்களில் இருந்தும் இப்படி வருகின்றனர்.

கொடைக்கானல் சர்வதேசப் பள்ளி

கொடைக்கானல் சர்வதேசப் பள்ளி தனது 100-வது ஆண்டு விழாவை 2000-ல் கொண்டாடியது. அமெரிக்கப் பாதிரிமார்கள் இந்தப் பள்ளிக்கூடம் அமைய நிதி வழங்கினர். அமெரிக்கப் பாதிரிமார்கள் மதுரை பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும், வேலூரில் மருத்துவ சேவைப் பிரிவுகளிலும் இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணத் தீபகற்பத்திலும் சேவை புரிந்தனர். அமெரிக்கப் பாதிரி மார்களின் கல்விச் சேவை காரணமாக யாழ் தீபகற்பத்தில் ஆங்கில அறிவு அதிகமாக வளர்ந்தது. இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு நல்ல கல்வித் தகுதி உள்ளவர்களை வேலைக்குச் சேர்த்த போது அரசு நிர்வாகத்தில் தமிழர்கள்தான் பெரும்பான்மையினராக இருந்தனர். தமிழர்களின் மக்கள் தொகைக்குப் பொருத்தம் இல்லாத வகையில் அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதாக சிங்களர்களால் குறை கூறப்பட்டது.

மதுரை, வேலூர், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பணிபுரிந்த பாதிரிமார்களின் குடும்பங்கள் கொடைக்கானலில் விடு முறையை ஒன்றாகக் கழித்தன. அப் போதுதான் தங்களுடைய பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி அமெரிக்கக் கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்றால் தங்களுக்கென்று பள்ளிக்கூடம் தேவை என்று தீர்மானித்தார்கள். கொடைக் கானலின் தட்ப-வெப்ப நிலை எக்காலத் துக்கும் அவர்களுக்கு ஏற்றதாக இருந்த தாலும் அப்போதைய சென்னை மாகா ணத்தின் பாதுகாப்பான நிலையையும் கருதி நல்ல தரத்தில் உறைவிடப் பள்ளிக் கூடத்தைத் தொடங்கினர். இத்தோடு அமெரிக்கத் தொடர்பு முடிந்துவிட வில்லை.

17-வது நூற்றாண்டில் மெட்றாஸ் மாகாண கவர்னராக இருந்த எலிஹு யேல் அமெரிக்காவின் கனெக்டிகட் நகரைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற பிறகு சொந்த நாடு சென்ற அவர் அங்கே தன் னுடைய பெயரிலேயே (யேல்) பல்கலைக் கழகத்தை நிறுவினார்.

பாஸ்டன் நகரைச் சேர்ந்த பிரெடரிக் டியூடர் 1840-ல் மெட்றாசில் டியூடர் ஐஸ் நிறுவனத்தை நிறுவி ஐஸ் வியா பாரத்தில் இறங்கினார். கப்பலில் இருந்து ஐஸ் வந்து இறங்கிய கட்டடமே ஐஸ் அவுஸ் என்று அழைக்கப்பட்டது. இப்போது விவேகானந்தர் நினைவு இல்லமாகக் காட்சி தருகிறது. 19-வது நூற்றாண்டில் கர்னல் ஹென்றி எஸ். ஆல்காட் என்ற பத்திரிகையாளரும் அமெரிக்க சிவில் யுத்தத்தில் பங்கேற் றவருமான அமெரிக்கர், 1875-ல் தியாசா பிகல் சொசைட்டியை நிறுவியவர் களுடன் இணைந்து பணியாற்றினார். அதன் தலைமையகம் அடையாறு ஆற்றங்கரையில் 1882-ல் அமைக்கப் பட்டது. 1886-ல் அதன் சிறப்புவாய்ந்த நூலகத்தை ஆல்காட் ஏற்படுத்தினார். பிறகு சிலோன் சென்று அங்கு புத்த மதம் பெரிய மதமாக புத்துயிர் பெறுவதில் பங்காற்றினார். ஆல்காட் புத்த மதத்தை உயிர்ப்பித்ததும் யாழ்ப்பாணத்தில் தமிழர்களை அமெரிக்கப் பாதிரிமார்கள் படிப்பித்ததும் பிற்காலத்தில் பெரும் மோதலுக்கும், பகைக்கும் காரணங்களாக அமைந்துவிட்டன. 1920-ல் ஹாரி குரோவ் பக் என்பவர் ஒய்எம்சிஏ உடல் பயிற்சிக் கல்லூரியைத் தொடங்கினார். இந்தியாவில் அதிக உடற்பயிற்சி ஆசிரியர்களுக்குக் கல்வியும் பயிற்சியும் அளித்த ஒரே நிறுவனம் இதுதான். 1924-ல் பாரீஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான முதல் இந்திய அணிக்குப் பயிற்சி அளித்தவரும் ஹாரி குரோவ் பக்தான்.

ஃபோர்டு அறக்கட்டளை தென்னிந்திய மொழிப் புத்தக அறக்கட்டளையைத் தொடங்கி நிர்வகித்தது. ‘நீங்களும் மோட்டார் காரும்’என்ற தலைப்பில் தமிழில் அது வெளியிட்ட 5 ரூபாய் புத்தகம் மட்டும் ஒரு லட்சம் பிரதிக்கும் மேல் விற்று சாதனை படைத்தது. கிண்டி பாம்புப் பூங்கா, மகாபலிபுரம் செல்லும் சாலையில் உள்ள முதலைப் பண்ணை ஆகியவற்றை நிறுவிய ரோமுலஸ் விட்டேகரும் கொடைக்கானல் அமெ ரிக்கப் பள்ளிக்கூட மாணவர்தான்.

- சரித்திரம் பேசும்… | (கோப்புப் படங்கள்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x