Published : 07 Dec 2016 10:04 AM
Last Updated : 07 Dec 2016 10:04 AM

ஜெ.நினைவலைகள்: வழக்கறிஞராவதே அவர் கனவு!

ஸ்ரீசைல மகாத்மியம் என்ற திரைப்படத்தில் சந்தியா நடித்துக்கொண்டிருந்தபோது படப்பிடிப்பைக் காண சிறுமி ஜெயலலிதாவும் சென்றார். சிறுமி பார்வதியாக நடிக்க வேண்டிய குழந்தை நட்சத்திரம் அன்றைக்கு வரவில்லை. படத்தின் இயக்குநர் ஜெயலலிதாவைப் பார்த்துவிட்டு, இக் குழந்தையை நடிக்க அனுமதிப்பீர்களா என்று சந்தியாவைக் கேட்டார். அதற்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு ஒப்பனை செய்து சிறுமி பார்வதியாக நடிக்க வைத்துப் படம் பிடித்தார்கள். முதல் படம் என்றால் இதுதான் என்று சொல்லிக்கொள்ளும் வாய்ப்பு அந்தப் படத்துக்குக் கிடைக்கவில்லை. காரணம் அந்தத் திரைப்படம் திரைக்கு வராமலேயே போய்விட்டது.

தன்னுடைய சித்தி பத்மாவதிக்கும் திருமணம் நடந்த பிறகு ஜெயலலிதா சென்னையில் தாயுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். சென்னையில் சர்ச் பார்க் பிரசன்டேஷன் கான்வென்ட் என்று அழைக்கப்படும் சேக்ரட் ஹார்ட் பள்ளிக்கூடத்தில் படிப்பைத் தொடர்ந்தார். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே கோபாலகிருஷ்ண சர்மா என்பவரிடம் கர்நாடக சங்கீதம் கற்றார். மேற்கத்திய இசையில் பியானோவையும் பரத நாட்டியம், கதக், மோகினி யாட்டம் ஆகிய நடன வகைகளையும் கற்றுக்கொண்டார். தன்னுடைய தாத் தாவைப் போல ஜெயலலிதாவும் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்றே சந்தியா விரும்பினார். ஜெயலலிதாவுக்கும் அந்த ஆசை தொற்றிக்கொண்டது.

ஜெயலலிதாவுக்கு நடனம் கற்றுத் தந்த குரு கே.ஜே. சரசா. அவர் வழுவூர் ராமையா பிள்ளை என்ற தேர்ந்த நட்டுவனாருக்கு தூரத்து உறவு. அத்துடன் முன்னணி நடன ஆசிரியராகவும் திரையுலகில் திகழ்ந்தவர். நட்டுவாங்கத் திலும் சிறந்து விளங்கிய சரசா 1960-ல் சரசாலயா என்ற நாட்டியப் பள் ளியைத் தொடங்கி பலருக்கும் நாட்டியம் சொல்லிக் கொடுத்தார். அவரிடம் நடனம் கற்ற பலர் சிறந்த பரத நாட்டியக் கலைஞர்களாக புகழ் பெறவே, ஜெய லலிதாவை அவரிடம் நாட்டியம் கற்க அனுப்பினார் சந்தியா.

சில ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்குப் பிறகு, மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபையில் ஜெயலலிதாவின் நடன அரங்கேற்றம் நடந்தது. சிவாஜி கணேசன் தலைமை விருந்தினராக வந்திருந்தார். நாட்டியத்தோடு நிறுத்தாமல் நடிப்பதற்கும் வரவேண்டும் என்று சிவாஜி தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதை சந்தியாவும் ஜெயலலிதாவும் ரசிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x