உள்ளூர் பறவைகளைக் கொண்டாடுவோம்

வேடந்தாங்கலுக்கும், கூந்தங்குளத்துக்கும் வரும் பறவைகள் எல்லாமே வெளிநாட்டு பறவைகள் என்றுதான் நம்மில் பெரும்பாலோர் நம்புகிறோம். ஆனால், அது பெருமளவு உண்மையில்லை. தமிழகப் பறவை சரணாலயங்களுக்கு வரும் பல பறவைகள் உள்நாட்டு பறவைகள்தான். நம்மூர் பறவைகளைப் பற்றிய அறியாமை காரணமாகவே, இந்தப் பிழை நேர்கிறது. இந்தப் பின்னணியில் மே 9-ம் தேதி (இன்று) நாடு முழுவதும் ஓரிடப் பறவைகள் நாளாக (Endemic Bird Day) கொண்டாடப்படுகிறது (கூடுதல் விவரங்களுக்கு: http://www.birdcount.in/).

பறவைகள்-உயிரினங்களில் ஓரிடவாழ்விகள் என்று குறிப்பிடப்படுபவை, உலகில் வேறெங்கும் இல்லாமல் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமே காணப்படுபவை. அதனாலேயே இவை சிறப்பு வாய்ந்தவை என்பதில் சந்தேகமில்லை. நாம் நினைப்பதற்கு மாறாக நம்மூரில் மட்டுமே வாழும் பறவை வகைகள் மிக அதிகம்.

குளிர்காலத்தில் வெளிநாட்டிலிருந்து விருந்தாளிகளாக வலசை பறவைகள் நம் நாட்டுக்கு அதிகம் வருகின்றன. அந்த வலசை பறவைகள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிவிட்ட இந்தக் காலத்தில், தவிட்டுக்குருவிகள் முதல் தவளைவாயன் வரையிலான நம்மூர் பறவைகள், ஓரிடவாழ்விகள் மீது கவனம் செலுத்தலாம்.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் ஓரிடப் பறவைகள் அதிகம் இருக்கின்றன. அதற்காக மற்ற பகுதிகளில் நம்மூர் பறவைகள் இருக்காது என்று அர்த்தமில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாதாரணமாகப் பார்க்கக்கூடிய பறவைகளும், நம்மூரில் மட்டுமே வாழ்பவைதான். அதனால், ஓரிடப் பறவைகள் நாளில் நம்மைச் சுற்றியுள்ள பறவைகளை உற்றுநோக்க முயற்சிக்கலாம். அதற்கு இந்தத் தொகுப்பு உதவும்:

More In