Last Updated : 12 Jul, 2019 08:39 AM

 

Published : 12 Jul 2019 08:39 AM
Last Updated : 12 Jul 2019 08:39 AM

ராஜினாமா செய்ய எடியூரப்பா என்னிடம் பேரம் பேசினார்: காங். எம்எல்ஏ ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு

அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களைப் போல பதவியை ராஜினாமா செய்வதற்காக எடியூரப்பா என்னிடம் பேரம் பேசினார் என காங்கிரஸ் எம்எல்ஏ ராஜீவ் கவுடா பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

சிருங்கேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜீவ் கவுடா நேற்று சிக்கமகளூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா நேற்று முன்தினம் என்னைதொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களைப் போல என்னையும் ராஜினாமா செய்யச் சொன்னார். அவ்வாறு ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தால் எனக்கு எதிர்ப்பார்க்க முடியாதஅளவுக்கு பணமும், பதவியும்தருவதாக ஆசை காட்டினார். அதனை நான் ஏற்க மறுத்துவிட்டேன். எனக்கு பணமும், அதிகாரமும் வேண்டாம் என கோபத்துடன் கூறியதால் தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டார்.

ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சிக்கும், மேலிட தலைவர்களுக்கும், தேர்ந்தெடுத்த மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த தலைவர்களுக்கு உரிய நன்றிக்கடனை செலுத்த தவறி விட்டனர். திடீரென கட்சி மாறியவர்களுக்கு எவ்வித கொள்கையும் கிடையாது. எதிர்காலத்தில் பாஜகவில் பதவி கிடைக்காவிட்டால் வேறு கட்சிக்கு ஓடிவிடுவார்கள்” என்றார்.

பாஜக மேலிடம் ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்ததாக கூறப்படும் நிலையில், ராஜீவ் கவுடாவின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x