Last Updated : 17 Jun, 2019 12:43 PM

 

Published : 17 Jun 2019 12:43 PM
Last Updated : 17 Jun 2019 12:43 PM

மூளைக்காய்ச்சல் பாதிப்பு: பிஹாரில் 100 குழந்தைகள் உயிரிழப்பு

பிஹார் மூளைக்காய்ச்சல் பாதிப்பினால். ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது. 

மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் நேற்றும் இறந்ததைத் தொடர்ந்து குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது என்று ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சுனில் குமார் ஷாஹி தெரிவித்தார்.

மாநில அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத்தின்படி நேற்று, ''ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இறப்பு எண்ணிக்கை 83'' என்று தெரிவித்துள்ளது.

அகியூட் என்செபாலிட்டீஸ் சின்ட்ரோம் எனப்படும் மூளை அழற்சி நோய்க்குறி காரணமாக ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகளைத் தொடர்ந்து பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீட்டுத் தொகை அறிவித்துள்ளார்.

 மூளைக்காய்ச்சல் பரவாமல் இருக்கவும் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேலும் சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

''அகியூட் என்செபாலிட்டீஸ் சின்ட்ரோம்'' எனப்படும் மூளைக்காய்ச்சல் குறிக்குக் காரணம் ஒருவகை வைரஸ் பரவலாகும். இதனால் ஆரம்பத்தில் லேசான காய்ச்சலில் தொடங்கும். பின்னர் இக்காய்ச்சல் தீவிரமடைந்து வலிப்பு, தலைவலி ஆகிய பாதிப்புகள் ஏற்படும். மூளை அழற்சி குணப்படுத்த முடியாதநிலைக்கு தள்ளப்படும்போதுதான் இந்நோயினால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

கடந்த வாரம் பிஹார் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே கூறுகையில், மூளைக்காய்ச்சல் குறித்த காரணத்தை கண்டறிய மாநில அரசு ஒரு குழு ஒன்று அமைத்துள்ளது '' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x