Last Updated : 17 Jun, 2019 12:00 AM

 

Published : 17 Jun 2019 12:00 AM
Last Updated : 17 Jun 2019 12:00 AM

2022 சட்டப்பேரவை தேர்தலுக்குள் உ.பி.யில் கட்சியை பலப்படுத்த வாரந்தோறும் பிரியங்கா பயணம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கிழக்கு உத்தரபிரதேச பொறுப்பாளராக காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். அவரது வரவால் காங்கிரஸ் கட்சிக்கு பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் ரேபரேலியில் மட்டும் சோனியா காந்தி வெற்றி பெற்றார். அமேதியில் ராகுல் காந்தி கூட தோல்வி அடைந்தார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் வரும் 2022-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் கட்சியை பலப்படுத்த பிரியங்கா காந்தி திட்டமிட்டுள்ளதாக கட்சி மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். அதன்படி, வாரம் 2 முறை உத்தரபிரதேசத்துக்கு சென்று கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களைச் சந்தித்து தொடர்பை பலப்படுத்த பிரியங்கா திட்டமிட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இத்திட்டத்தால் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதுடன், அவர்கள் விருப்பு வெறுப்புகளைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப சட்டப்பேரவைத் தேர்தலில் வியூகம் வகுக்க முடியும் என்று பிரியங்கா நம்புவதாக பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x