Published : 15 Jun 2019 09:04 PM
Last Updated : 15 Jun 2019 09:04 PM

பெண் போலீஸ் அதிகாரியை தீயிட்டுக் கொளுத்திய போக்குவரத்துக் காவலர்: கேரளாவில் பயங்கரம்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரையில் பெண் சிவில் போலீஸ் அதிகாரி ஒருவரை போக்குவரத்து போலீஸார் ஒருவர் படுகொலை செய்துள்ளது பரபரப்பாகியுள்ளது.

 

32 வயதான பெண் போலீஸ் அதிகாரி சவுமியா புஷ்கரன் வல்லிக்குன்னாம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில் வட்டக்காடு பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு தன் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார் சவுமியா புஷ்கரன்.

 

அப்போது அலூவா காவல்நிலையத்தைச் சேர்ந்த அஜாஸ் என்ற போக்குவரத்து காவலர்  தான் காரினால் சவுமியாவின் ஸ்கூட்டர் மீது மோதியதாகவும் சவுமியா எழுந்து ஓடியதாகவும் அப்போது அவரை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

 

மேலும், வெட்டியதோடு  நிற்காமல் கெரசின் ஊற்றி அவர் மீது தீயை வைத்துக் கொளுத்தியதாகவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. வெட்டியடில் சவுமியாவின் கழுத்தில் பயங்கரக் காயம் ஏற்பட்டுள்ளது.

 

அஜாஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டார், இவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. சவுமியாவின் கணவர் சஞ்சீவ் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார், இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

 

இந்தச் சம்பவம் மதியம் 3.30 மணிக்கு நடந்துள்ளது.  கொலைக்கான காரணங்கள் விசாரணை முடிவிதான் தெரியவரும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x