Published : 07 Jun 2019 07:03 PM
Last Updated : 07 Jun 2019 07:03 PM

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்காக பாஜக மட்டும் ரூ.28,000 கோடி  செலவிட்டுள்ளது: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

2019 மக்களவைத் தேர்தல்களில் மொத்தமாக அனைத்துக் கட்சிகளும் செய்த தேர்தல் செலவுகள் ரூ.60,000 கோடி இதில் பாஜக மட்டும் ரூ.28,000 கோடி செலவிட்டுள்ளது, எங்கிருந்து பணம் வந்தது என்பதை பாஜக தெரிவிக்குமா என்று காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது.

 

புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி. மற்றும் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, “ஊடக ஆய்வுகள் மையத்தின் தரவுகளின் படி பாஜக ரூ.28,000 கோடியைச் செலவு செய்துள்ளது (அல்லது 45%), அதாவது மொத்த கட்சிகள் செய்த ரூ.60,000 கோடியில் ரூ.28,000 கோடியை பாஜக தேர்தலில் செலவு செய்துள்ளது.

 

இந்தத் தேர்தலில் பாஜக செலவிட்ட தொகை நாட்டின் கல்வி பட்ஜெட்டின் மூன்றில் ஒரு பங்காகும். சுகாதாரப் பட்ஜெட்டில் 43% ஆகும்.  பாதுகாப்பு பட்ஜெட்டில் 10% ஆகும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பட்ஜெட்டில் 45% ஆகும்.

 

நமாமி கேங்க் திட்டத்திற்கான பாஜக அரசு ரூ.24,000 கோடி செலவிட்டது, ஆனால் அதன் தேர்தல் செலவுகள் இதையும் தாண்டியுள்ளது. தேர்தல் என்பது நியாயமாக நடக்க வேண்டும். அனைவருக்கும் சரிசம வாய்ப்புகள் வழங்கப்படுவதாகும். நம் முக்கிய அமைப்பின் அங்கம் ஜனநாயகம் அது சுதந்திர நியாய தேர்தலை நம்பியுள்ளது.

 

இது சாத்தியமாக வேண்டுமெனில் அனைவருக்கும் சரிசம வாய்ப்பு சாத்தியமாக வெண்டும். அதாவது அரசியல் கட்சிகளுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்

 

இந்தத் தேர்தல் செலவுத்தொகையில் பெரும்பங்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்ததா?” என்று கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x