Last Updated : 23 May, 2019 11:18 AM

 

Published : 23 May 2019 11:18 AM
Last Updated : 23 May 2019 11:18 AM

கர்நாடகாவில் பாஜக 23 இடங்களில் முன்னிலை; தேவகவுடா பேரன் தவிர குடும்ப வேட்பாளர்கள் பின்னடைவு

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கர்நாடகா மாநிலத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவகவுடாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. இதில் தேவகவுடா பேரனைத்தவிர குடும்ப வேட்பாளர்கள் அனைவரும் பின்னடைவு.

தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவன்னா ஹசன் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். மற்ற குடும்ப உறுப்பினர்கள் தேவகவுடா உட்பட பின்னிலையில் உள்ளனர். பெங்களூரு சவுத் தொகுதியில் பாஜக அறிமுக வேட்பாளர் தேஜஸ்வி சூரியா சுமார் 1 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் பி.ஒய்.ராகவேந்திரா 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

இதில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 23 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

முதல்வர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

மாண்டியா தொகுதியில் திரைப்பட நடிகையும் மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியுமான சுமலதா முன்னணியில் உள்ளார். இவருடன் போட்டியிட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

காங்கிரஸில் சீட் கிடைக்காத நிலையில் தனித்துப் போட்டியிட்ட சுமலதாவுக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x