Last Updated : 23 May, 2019 09:30 AM

 

Published : 23 May 2019 09:30 AM
Last Updated : 23 May 2019 09:30 AM

மக்களவைத் தேர்தல் 2019: கர்நாடகாவில் 5 இடங்களில் பாஜக முன்னிலை

மக்களவைத் தேர்தல் 2019-ல் கர்நாடக மாநிலத்தின் 28 லோக்சபா தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை அறிவிக்கப்பட்ட 5 இடங்களிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.

 

இந்திய தேர்தல் ஆணைய இணையதள விவரங்களின் படி பெல்லாரியில் பாஜக வேட்பாளர் தேவேந்திரப்பா, காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ்.உக்ரப்பாவைக் காட்டிலும் 311 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.

 

தக்‌ஷின் கன்னடாவில் பாஜக எம்.பியாக இருந்த நளின் குமார் கட்டீல் காங்கிரஸ் வேட்பாளரைக் காட்டிலும் 1,912 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.

 

தாவன்கெரேயில் பாஜக முன்னாள் எம்பியும் மத்திய அமைச்சருமான சித்தேஷ்வரா காங்கிரஸ் வேட்பாளர் மஞ்சப்பாவைக் காட்டிலும் 953 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.

 

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடாவின் குடும்பத் தொகுதியான ஹாசனில் அவரது பேரன் ப்ரஜால் ரேவன்னா பாஜக வேட்பாளர் மஞ்சுவைக் காட்டிலும் 216 வாக்குகள் பின்னடைவு கண்டுள்ளார்.

 

அதே போல் காரடி சங்கன்னா என்ற பாஜக முன்னாள் எம்பி ரெய்ச்சூரில் காங்கிரஸைக் காட்டிலும் 1,710 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x