Published : 23 May 2019 09:02 AM
Last Updated : 23 May 2019 09:02 AM

ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தல்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முன்னிலை

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது, அதன் வாக்குகளும் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.

இதில், ஆந்திராவில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில், 25 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  இதில் பாஜக 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. என்பிபி, காங்கிரஸ் இன்னமும் கணக்குகளைத் தொடங்கவில்லை

ஒடிசாவில் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பிஜு ஜனதா தளம் 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

சிக்கிம் மாநிலத்தில் மொத்தம் 32 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 இடங்களுக்கான முன்னிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், எஸ்டிஎஃப் கட்சி 5 இடங்களிலும் முன்னிலை வகிக்க காங்கிரஸ், பாஜக இன்னமும் கணக்கைத் தொடங்கவில்லை.

தமிழகத்தில் 22 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சற்று முன்புவரை 3 இடங்களில் திமுகவும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x