Published : 23 May 2019 07:57 AM
Last Updated : 23 May 2019 07:57 AM

வாக்குகள் எவ்வாறு எண்ணப்படுகின்றன?- ஒவ்வொரு கட்டம் குறித்த விளக்கம்

 

17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக முடிந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 542  தொகுதிகளில் 273 இடங்களில் பாஜக, காங்கிரஸ் நேருக்கு நேர் போட்டி.  7,928 வேட்பாளர்கள் நாடுமுழுவதும் போட்டி, 724 பெண்கள் போட்டியிடுகின்றனர்.  பாஜக 437 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சி 421 வேட்பாளர்களையும்  களமிறக்கியுள்ளது. இந்திய வரலாற்றிலையே காங்கிரஸ் கட்சியைக்காட்டிலும் அதிகமாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ள கட்சி பாஜக.

வாக்குகள் எவ்வாறு எண்ணப்படுகின்றன என்பது குறித்த பார்வை

1. தேர்தல் பார்வையாளர்கள், துணை பார்வையாளர்கள் வருகை காலை 5 மணிக்கு தொடங்கியது.

2. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை, தேர்தல் அதிகாரி முன்னிலையில் தொடங்கும்.

3. ஒவ்வொரு வாக்கு எண்ணும் அறைக்கும் ஒரு மேற்பார்வையாளரும், வேட்பாளர்களின் முகவர்களும் அனுமதிக்கப்படுவர்

4. அதிகாரபூர்வ அதிகாரிகள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை எந்திரத்தின் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

5. மேற்பார்வையாளர் மூலம் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிக்கப்படும். தபால் வாக்குகளும் வாக்குஎந்திர வாக்குகள் எண்ணும்போது எண்ணப்படும்.

6. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தபின்பும், மேற்பார்வையாளர் கையொப்பமிட்டு வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்கள் ஏஜென்டிடம் அளிப்பார்கள். தேர்தல் அதிகாரியும் கையொப்பமிட்டபின் அறிவிக்கப்படும்.

7. அனைத்தை நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்யப்படும்.

8. வாக்கு எந்திர எண்ணிக்கையைத் தொடர்ந்து விவிபிஏடி ஆய்வு செய்யப்படும். உச்ச நீதிமன்ற உத்தரவைப்பின்பற்றி, ஒரு சட்டப்பேரவையில் 5 வாக்குப்பதிவு மையங்களில் உள்ள வாக்கு எந்திரம், விவிபிஏடி எந்திரங்கள் சீட்டுகள் சரிபார்க்கப்படும்.

9. ஒப்பீடு செய்வதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், மீண்டும் விவிபிஏடி எந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும், சீட்டுகளில் உள்ள சின்னங்கள் சரிபார்க்கப்படும்

10. ஒப்புகை சீட்டுகள் மற்றும் வாக்கு எந்திரங்கள் கணக்கு சரிவரவில்லை என்றால், விவிபிஏடி எந்திரங்கள் கணக்கில் கொள்ளப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x