Last Updated : 22 May, 2019 05:39 PM

 

Published : 22 May 2019 05:39 PM
Last Updated : 22 May 2019 05:39 PM

தொடக்கத்தில் இல்லை கடைசியில்தான்: ஒப்புகை சீட்டை ஒப்பிட்டு பார்க்கும் முறையில் தேர்தல் ஆணையம் தகவல்

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின்படி, வாக்கு எந்திரத்தையும், ஒப்புகை சீட்டு எந்திரத்தில் உள்ள சிலிப்புகளையும் ஒப்பிட்டு சரிபார்க்கும் முறை தொடக்கத்திலேயே செய்ய முடியாது, கடைசிக் கட்டத்தில் செய்யவே தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

மேலும், தபால் வாக்குகள் எண்ணும்போதே, மின்னணு வாக்கு எந்திரங்களின் வாக்குகளையும் கணக்கிடும் பணி ஒரே நேரத்தில் தொடக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் சர்வீஸ் வாக்குகள் எனப்படும் ராணுவம், துணை ராணுவம், போலீஸார் ஆகியோரின் வாக்குகள் இந்த முறை 16 லட்சத்தை தாண்டும் என்பதால் ஒரேநேரத்தில் நடக்க இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கையில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால், ஒப்புகை சீட்டும், வாக்கு எந்திரங்களில் உள்ள வாக்கும் ஒப்பீட்டில் முரண்பாடு இருந்தால், சட்டப்பேரவை முழுவதையும் 100 சதவீதம் தொடக்கத்தில் இருந்து கணக்கிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு, அதைத்தொடர்ந்து வாக்கு எந்திரங்களில் உள்ள வாக்குகள் கணக்கிடப்படும் முறை இப்போது வரை இருந்து வருகிறது. இந்த மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 5 வாக்கு பதிவு மையங்களில் உள்ள வாக்கு எந்திரங்கள், ஒப்புகை தணிக்கை சீட்டு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து கணக்கிடும் முறை செயல்படுத்தப்படுகிறது.

ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போதே, வாக்கு எந்திரங்கள், விவிபிஏடி எந்திரங்கள் ஒப்பிட்டு பார்ப்பதை தொடங்கிவிட வேண்டும் ஆனால், பழைய முறையான தபால் வாக்குகளை முதலில் எண்ணும் முறையை மாற்றிக்கொள்ளத் தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. வழக்கம் போல் தபால் வாக்குகள்தான் முதலில் எண்ணப்படும், அதன்பின் கடைசியில்தான் விவிபிஏடி மற்றும் வாக்கு எந்திரங்களில் வாக்குகளை கணக்கிடும் பணி தொடங்கும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x