Published : 19 May 2019 09:37 PM
Last Updated : 19 May 2019 09:37 PM

பாஜக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு: மக்களவைத் தேர்தல் கருத்துக் கணிப்பு; முழுமையான தகவல்

மக்களவைத்  தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடை பெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 11-ம் தேதி முதல் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்தன. இறுதியாக 7-ம் கட்டத் தேர்தல் இன்று நடந்தது.

இதில், பிஹார் (8), இமாச்சலபிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), மத்தியபிர தேசம் (8), பஞ்சாப் (13), உத்தர பிரதேசம் (13), மேற்குவங்கம் (9) மற்றும் சண்டிகர் (1) ஆகிய 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட 59 மக்களவைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவுக்காக 1.12 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

 7-ம் கட்ட தேர்தலில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு மாதங்களாக நடந்து வந்த தேர்தல் திருவிழா இன்றைய வாக்குப்பதிவுடன் முடிவடைந்தது. வாக்கு எண்ணகிக்கை 23-ம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில்  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

 

மக்களவைத் தேர்தல் 2019 = தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவரம்:

 

கருத்து கணிப்பு நிறுவனம்பாஜக கூட்டணிகாங்கிரஸ் கூட்டணி

பிறர்

 

ரிபப்ளிக் டிவி - சிவோட்டர்ஸ்

287

 

128127
ரிபப்ளிக் டிவி - ஜன்கி பாத்

305

 

124113
டைம்ஸ் நவ் - விஎம்ஆர்

306

 

132104
சிஎன்என் -நியூஸ் 18267127

148

 

நியூஸ் நேஷன்

282- 290

 

118-126130 -138
இந்தியா டுடே - ஆக்ஸிஸ்

339- 365

 

77-10879 -111
ஏபிபி - ஏசி நீல்சன் பாஜக

267

 

127148

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x