Last Updated : 19 May, 2019 05:05 PM

 

Published : 19 May 2019 05:05 PM
Last Updated : 19 May 2019 05:05 PM

வாக்களிக்க வந்த இந்தியாவின் முதல் வாக்காளருக்கு மேளதாள வரவேற்பு: 102 வயதிலும் உற்சாகமாக வாக்களித்தார்

இமாச்சல பிரதேசத்தில் கல்பா நகரில் வாக்களிப்பதற்காக வந்த இந்தியாவின் முதல் வாக்காளர் 102 வயதான ஷ்யாம் சரண் நேகிக்கு பாரம்பரிய நாட்டுப்புற இசை முழங்கி உற்சாகம் பொங்க அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஷ்யாம் சரண் நேகி 1951ல் பொதுத் தேர்தலில் தனது வாக்கினை அளித்தார். அவர்தான் சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக வாக்களித்தவர் என்ற பெருமை பெற்றவர்.

அவர் நாட்டின் 17வது மக்களவைத் தேர்தலிலும் இன்று தனது 102 வயதிலும் வாக்களிக்க வந்தார். அவரை தேர்தல் அதிகாரிகள் உற்சாகம் பொங்க கல்பா நகர் வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தனர். அவர் ஆர்வத்தோடு தனது வாக்கினை இன்று அளித்தார்.

இமாச்சல பிரதேசம், கின்னார் மாவட்டத்தில் சட்லஜ் ஆற்றின் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சிறிய நகரம் கல்ப். இங்கு வசிப்பவர்கள் கின்னாரி மக்கள் என்றழைக்கப்படுகின்றனர். இந்நகரம் ஆப்பிள் பழத்தோட்டங்களுக்காக அறியப்படுகிறது. இங்கு வசிக்கும் மக்கள் பௌத்த, இந்துமதங்களைச் சேர்ந்தவர்கள்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x