Published : 15 May 2019 06:19 PM
Last Updated : 15 May 2019 06:19 PM

இந்திய-திபெத் எல்லைக்கு அருகே ‘பெரிய அளவில்’ கனிமவள சுரங்க நடவடிக்கைகளில் சீனா

திபெத் தன்னாட்சிக்குட்பட்ட பகுதியில் இந்திய எல்லைக்கு வெகு அருகே சீனா பெரிய அளவில் கனிமவளச் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக உள்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

 

இதனையடுத்து இந்திய நிலவியல் ஆய்வு கழகத்திற்கு அருணாச்சலப் பிரதேசம் இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுப்பதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யுமாறு எழுதியுள்ளது.

 

இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு மாநில செயலர் பிடோல் தாயேங் கூறும்போது, “நிலவியல் மற்றும் கனிமவளங்கள் துறை இந்திய நிலவியல் ஆய்வு கழகத்துடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டது. இதில் இந்தியா-சீனா எல்லையருகே கனிமவளங்கலை தோண்டி எடுப்பதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யுமாறு கோரியுள்ளோம், காரணம் திபெத் எல்லையருகே சீனா பெரிய அளவில் கனிமவள சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கோரிக்கையை முன் வைத்தோம் என்று தெரிவித்தார்.

 

இந்தக்  கூட்டத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் கனிமவளப்படிவுகள் பற்றிய அறிக்கையை ஜிஎஸ்ஐ தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் உள்ள கிராபைட்டுகளில் 35% ரிசர்வ் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

 

ஜம்மு காஷ்மீரில் கிராபைட் வளம் 37%,  ஜார்கண்ட் 6%, தமிழகம் 5%, ஒடிஷா 3% கிராபைட் வளங்களைக் கொண்டது. ஆனால் அடிப்படை கனிமவள ஆதாரங்களில் தமிழகம் 37% வளங்களுடன் முன்னிலையில் உள்ளது, ஜார்கண்ட் இதற்கு அடுத்த இடத்தில் 30% வளத்துடன் உள்ளது.  ஒடிசாவில் 29% என்று ஜிஎஸ்ஐ தெரிவித்துள்ளது.

 

உயர் உஷ்ணம் தேவைப்படும் உயர் உற்பத்தி நடவடிக்கைகளில் கிராபைட்டின் பயன்பாடு அதிகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x