Last Updated : 21 Apr, 2019 04:01 PM

 

Published : 21 Apr 2019 04:01 PM
Last Updated : 21 Apr 2019 04:01 PM

அபிநந்தன் திரும்பி வராவிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானை எச்சரித்தோம்: பிரதமர் மோடி ஆவேசம்

இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமான் பாதுகாப்பாக இந்தியா திரும்பாவிட்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானை எச்சரித்தோம் என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி திரும்பியது.

அப்போது, இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் விமானம் எப்-16 வகையை இந்திய விமானி மிக் ரக விமானத்தில் விரட்டிச் சென்று அதை சுட்டுவீழ்த்தினார்.

அதன்பின் விமானம் கோளாறு அடைந்தநிலையில், பாகிஸ்தான் பகுதியில் பாராசூட்டில் குதித்தார். அவரைப் படித்த பாகிகஸ்தான் ராணுவத்தினர் 2 நாட்களில் இந்திய அரசிடம் ஒப்படைத்தனர். இந்திய விமானியை கைது செய்தபின் விரைவாக பாகிஸ்தான் ஒப்படைத்தது இதுதான் முதல்முறை. இதகுறித்து தேர்தல் பிரச்சாரத்தில் இன்று பிரதமர் மோடி பேசினார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் வரும் 23-ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

குஜராத்தில் உள்ள பதான் பகுதியில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திய விமானி அபிந்தன் வர்த்தமான், பாகிஸ்தான் விமானத்தை சுட்டுவீழ்த்தியபின் அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். உடனே நம்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் என்னிடம் என்ன சொல்லப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.

நாங்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம். இந்திய விமான அபிநந்தன் வர்த்தமான் உயிருக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், மோடி இப்படி செய்துவிட்டார் என்று இந்த உலகத்துக்கு நீங்கள் சொல்லநேரிடும் என்று பாகிஸ்தானை எச்சரித்தோம்.

அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர் அபிநந்தன் கைது செய்யப்பட்ட மறுநாள், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்தியப் பிரதமர் மோடி, 12 ஏவுகணைகளை தயராக வைத்துள்ளார், எந்த சூழலிலும் தாக்குதல் நடத்தினால், பேரழிவு ஏற்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் பாகிஸ்தான் ராணுவத்தினர்  அபிநந்தனை பாதுகாப்பாக நாட்டுக்கு திருப்பி அனுப்பினார்.

இதை நாங்கள் கூறவில்லை, அமெரிக்கா தான் நம்மைப் பற்றிக் கூறியது. இப்போதுவரை நான் எதுவும் கூறவில்லை. எனக்கான நேரம் வரும்போது நான் பேசிக்கொள்வேன் என்று அமைதியாக இருக்கிறேன்.

என்னுடைய தலைமையிலான அரசு தேசத்தின் பாதுகாப்பை முக்கியமாகக் கருதுகிறது. எனக்கு பிரதமர் பதவி கிடைக்குமா என்பது தெரியாது, ஆனால், நான் உயிரோடு இருக்க வேண்டுமா அல்லது தீவிரவாதிகள் உயிரோடு இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்துவிட்டேன்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறியது வேடிக்கையாக இருக்கிறது. மோடி என்ன செய்கிறார் என்றே எனக்குத் தெரியாது என்று சரத்பவார் தெரிவித்தார்.

மோடி என்ன செய்யப்போகிறார் சரத்பவார் தெரிந்து கொண்டால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எவ்வாறு தெரிந்து கொள்வார்.

என் மாநில மக்கள் மண்ணின் மைந்தனான என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டிய கடமையும், 26 இடங்களையும் வெல்ல வைக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. மீண்டும் என் தலைமையிலான அரசு அமையும், குஜராத்தில் 26 இடங்களில் பாஜக வெல்லாவிட்டால், மே 23-ம் தேதி தொலைக்காட்சியில் இதுகுறித்த விவாதங்களை அதிகமாக இருக்கும்.

இவ்வாறு மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x