Last Updated : 07 Apr, 2019 12:20 PM

 

Published : 07 Apr 2019 12:20 PM
Last Updated : 07 Apr 2019 12:20 PM

டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மிக்காக வேட்பாளர் அறிவிப்பை நிறுத்தி வைத்திருக்கும் பாஜக

டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதனால் அறிவிக்கப்படாமல் உள்ள வேட்பாளர்களை பாஜகவும் நிறுத்தி வைத்துள்ளது.

டெல்லி, சண்டிகர், ஹரியாணா மற்றும் பஞ்சாபில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையில் நேற்று முடிந்துள்ளது. இதன் முடிவுகள் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் தம் பேச்சுவார்த்தை காரணமாக டெல்லியின் ஏழு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இவர்களது வேட்பாளர்களைப் பொறுத்து தம் தேர்வை மாற்றலாம் என பாஜகவும் காத்திருக்கிறது.

இதுவரையும் முந்நூறுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களை பல்வேறு மாநிலங்களில் பாஜக அறிவித்துள்ளது. ஆனால், டெல்லியில் மட்டும் இன்னும் எவரையும் அறிவிக்கவில்லை. தற்போது டெல்லியின் ஏழு தொகுதிகளும் பாஜக வசம் உள்ளன. ஆனால், அம்மாநிலத்தின் ஆட்சி ஆம் ஆத்மியிடம் உள்ளது. எனினும், இந்தத் தேர்தலிலும் அந்த ஏழு தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக வியூகம் அமைத்து வருகிறது.

இதன் காரணமாக பாஜக எம்.பி.க்களில் உதித்ராஜ், மீனாட்சி லேகி உள்ளிட்ட சிலருக்கு டெல்லியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது எனக் கருதப்படுகிறது. டெல்லி மாநில பாஜக தலைவரும் போஜ்புரி மொழி திரைப்பட நடிகருமான மனோஜ் திவாரிக்கு மட்டும் வாய்ப்பு உறுதி எனத் தெரிகிறது.

கிரிக்கெட் விளையாட்டு வீரர் கவுதம் கம்பீர் உள்ளிட்ட சிலரை பாஜக தேர்வு செய்து வைத்துள்ளது. இவர்களில் யாரும் எதிர்பார்க்காத பிரபலங்களும் வேட்பாளர்களாக உள்ளனர். ஆம் ஆத்மியும், காங்கிரஸும் யாரை நிறுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து பாஜக தம் தேர்வில் உள்ள வேட்பாளர்களை களம் இறக்கும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடியும் தனது பிரச்சாரத்தை இன்னும் டெல்லியில் செய்யாமல் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x