Published : 06 Apr 2019 07:36 AM
Last Updated : 06 Apr 2019 07:36 AM

ராகுலை எதிர்ப்பது ஏன்?- சரிதா நாயர் விளக்கம்

கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது வீடுகள், அரசு அலுவலகங்களுக்கு சூரிய மின் சக்தி தகடுகளை அமைத்து தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது பாலியல் புகார்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

வரும் மக்களவைத் தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சரிதா நாயர் களத்தில் இறங்கியுள்ளார். வயநாடு மற்றும் எர்ணாகுளம் தொகுதிகளில் அவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹிபி ஈடன் உட்பட 12 மூத்த தலைவர்கள் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுதொடர்பாக ராகுல் காந்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது ஹிபி ஈடன், எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடு கிறார். அந்த தொகுதியில் அவருக்கு எதிராக நானும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். தவறிழைத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத ராகுல் காந்திக்கு எதிராகவும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறேன்.

காங்கிரஸ் தலைவர்களின் பாலியல் குற்றங்கள், ஊழல், மோசடியை அம்பலப்படுத்தவே தேர்தலை சந்திக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x